Shani Margi 2025: நவம்பர் மாதத்தில் சனி பகவான் தனது வக்ர நிலையில் இருந்து மாறி நேரடியாக பயணிக்க இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க இருக்கிறது. அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஜோதிடத்தில் சனி பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் கர்ம வினைகள் அடிப்படையில் பலன்களை வழங்குவார். கடின உழைப்பு, விடாமுயற்சி, நல்லொழுக்கம், வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் ஆகியவற்றின் காரணியாக அவர் விளங்குகிறார். சனி பகவானின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் நவம்பர் 29, 2025 சனிபகவான் வக்ர நிலையில் இருந்து மாறி, மார்க்கி நிலைக்கு மாற இருக்கிறார். இந்த மாற்றம் மூன்று ராசிக்காரர்களுக்கு சுபமாகவும், வாழ்க்கையில் அபரிமிதமான முன்னேற்றத்தையும், அதிர்ஷ்டத்தையும் அள்ளித் தருவதாக அமைய இருக்கிறது.
26
மார்க்கி என்றால் என்ன?
ஒரு கிரகம் வக்ர நிலை, அதாவது பின்னோக்கி நகர்வது போன்ற நிலையிலிருந்து மாறி, நேராக பயணிக்கத் தொடங்குவதையே மார்க்கி என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது. சனிபகவான் நேரடியாக பயணிக்கும் பொழுது அவரது பலன்கள் சுபமாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். முடிவுகள் எடுப்பதில் தெளிவு கிடைக்கும். வாழ்க்கையில் இருந்த தடைகள் நீங்கும். சனி பகவானின் நேரடி இயக்கம் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என பார்க்கப்படுகிறது.
36
ரிஷபம்
சனி பகவானின் இந்த நேரடி இயக்கமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மையை தரவுள்ளது.
இது ரிஷப ராசியின் லாப ஸ்தானம் எனப்படும் 11 வது வீட்டில் இருக்கிறது. இதன் விளைவாக ரிஷப ராசிக்காரர்கள் எதிர்பாராத அளவிற்கு லாபத்தை பெறுவீர்கள்.
உங்கள் வருமானம் பன்மடங்காக அதிகரிக்கும்.
நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த வேலைகள் நடக்கும்.
தொழில் ரீதியான நடவடிக்கைகள் அனைத்தும் வெற்றி பெறும்.
தொழிலதிபர்கள் புதிய முதலீடுகளை செய்வீர்கள்.
இது எதிர்காலத்தில் நல்ல லாபத்தைக் கொடுக்கும்.
நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். நண்பர்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.
தொழிலை விரிவு படுத்துவதற்கான சாதகமான நேரம் நெருங்கும்.
வாகனம் அல்லது புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும்.
குடும்பத்தினர் அல்லது குழந்தைகளிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள்.
56
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சனி நேரடி பயணம் என்பது தன ஸ்தானம் எனப்படும் இரண்டாம் வீட்டில் நிகழ இருக்கிறது.
இதன் காரணமாக திடீர் பண வரவு மற்றும் நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றத்தைப் பெறுவீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். குடும்ப உறவுகளில் இருந்த சிக்கல்கள் தீரும்.
சேமிப்பு உயரும். வாய்ப்புகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள்
தொடர்பான பிரச்சனைகள் சமூகமாக முடிவிற்கு வரும்.
உங்கள் பேச்சு மற்றும் செயல் திறன் மேம்படும்.
இதன் மூலம் உத்தியோகத்திலும், சமூகத்திலும் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
நீங்கள் பேசும் வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும்.
66
பலனடையும் பிற ராசிகள்
சனி நேரடி பயணத்தால் மேற்குறிப்பிடப்பட்ட ராசிகள் அதிகப் பயனைப் பெற்றாலும் பிற ராசிகளிலும் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் ஆரம்ப காலம் என்றாலும் சனியின் நேரடி பயணத்தால் பணிச்சுமை குறைந்து உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கத் தொடங்கும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கும் இந்த காலகட்டம் நல்ல பலன்களை அளிக்கும். உங்கள் நம்பிக்கை, செல்வாக்கு அதிகரிக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி நன்மைகளும் ஏற்படும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)