Astrology: ஒரே ராசியில் சந்திக்கும் 4 சுப கிரகங்கள்.! 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்.! பண மழை பொழியும்.!

Published : Oct 23, 2025, 01:09 PM IST

Chaturgrahi yog 2025: இன்றைய தினம் துலாம் ராசியில் சதுர்கிரக யோகம் உருவாக இருக்கிறது. இந்த யோகமானது ஐந்து ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை வழங்க இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
16
சதுர்கிரக யோகம் 2025

ஜோதிடத்தின்படி கிரகங்களின் நிலைகள் மற்றும் அவற்றின் பெயர்ச்சிகள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நேர்மறை மற்றும் எதிர்மறை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் தற்போது துலாம் ராசியில் நான்கு முக்கிய கிரகங்களின் இணைப்பு நடக்க இருக்கிறது. இது அரிய மற்றும் சக்தி வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. துலாம் ராசியில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் ஆகிய நான்கு கிரகங்களும் ஒரே நேரத்தில் சஞ்சரிப்பதால் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இது ஐந்து ராசிக்காரர்களின் தொழில், வியாபாரம், மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொண்டு வரவுள்ளது.

26
மேஷம்

சதுர்கிரக யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் அதிக நன்மைகளை பெற உள்ளனர். அக்டோபர் 23 தொடங்கி அடுத்த சில தினங்களுக்கு உங்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். புதிய வழிகளில் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்கள் பக்கம் இருக்கும். சிறிய அளவில் தொழில் செய்து வருபவர்கள் பெரிய அளவில் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவும், மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். பணியிடத்தில் இருந்து வந்த மன அழுத்தம் குறையும். எதிர்பாராத வகையில் திடீர் பண வரவு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

36
கடகம்

சதுர்கிரக யோகத்தால் கடக ராசிக்காரர்களுக்கும் பல வழிகளில் நன்மை கிடைக்கும். நீங்கள் ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் தந்தை வழியில் இருந்து நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணியிடத்தில் இருப்பவர்கள் மூத்த அதிகாரிகள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் மற்றும் வணிகர்களுக்கு அடுத்த சில தினங்களுக்கு வியாபாரம் பெருகி, நல்ல லாபம் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும். இதன் காரணமாக நல்ல திட்டங்களில் முதலீடு செய்வீர்கள்.

46
துலாம்

சதுர்கிரக யோகம் துலாம் ராசியின் முதல் வீட்டில் உருவாகிறது. இதன் காரணமாக துலாம் ராசிக்காரர்களுக்கு செல்வ வளமும், செழிப்பும் கிடைக்க இருக்கிறது. வீட்டில் தடைபட்டு நின்ற சுப காரியங்கள் நடைபெறும். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமண வரன் கிடைக்கும். நேர்காணல் முடித்து காத்திருப்பவர்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதால், வணிகம் செய்து வருபவர்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். முக்கிய முடிவுகளை தைரியமாக எடுத்து வெற்றியை ஈட்டுவீர்கள். சந்தைப்படுத்துதல் தொடர்பான துறையில் இருப்பவர்கள் நல்ல பண வரவை காண்பீர்கள்.

56
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சதுர்கிரக யோகம் சுபம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்க கூடியதாக இருக்கும். உங்களுடைய செயல்பாடுகள், சிந்தனைத் திறன் அனைத்தும் மேம்படும். பணியிடத்தில் உங்களுக்கு எதிராக நடந்து வரும் சதியை முறியடித்து வெற்றி காண்பீர்கள். வேலையிடத்தில் நீங்கள் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துவீர்கள். வணிகம் செய்து வருபவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த ஒப்பந்தம் அல்லது ஆர்டரைப் பெறுவீர்கள். இதன் காரணமாக நிதி ரீதியான லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவீர்கள். முதலீடுகளில் இருந்து கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

66
கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக சந்தித்து வந்த குழப்பங்கள், சிக்கல்கள் தீர்ந்து மகிழ்ச்சியாக உணர்வீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் தள்ளிக் கொண்டே சென்றவர்களுக்கு நல்ல இடத்தில் திருமண வரன் அமையும். அதிர்ஷ்டத்தின் முழு துணையும் உங்கள் பக்கம் இருக்கும். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியைக் காண்பீர்கள். தொழிலில் புதிய உச்சங்களை எட்டுவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். இதன் காரணமாக மிகப்பெரிய லாபத்தைக் காண்பீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக நிறைவேறாத கனவுகள் அல்லது ஆசைகள் நிறைவேறும். சமூகத்தில் உங்கள் கௌரவம் அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories