Shani Dev Uday in Meena Rasi: ஜோதிடத்தின் படி சனி பகவான் விரைவில் மீன ராசியில் உதயமாக இருக்கிறார். இதன் காரணமாக மூன்று ராசியில் பிறந்தவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்க உள்ளது. அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வேத ஜோதிடத்தில் சனி பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவராகவும், நீதிபதியாகவும், தண்டிப்பவராகவும் கருதப்படுகிறார். இவரின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும்போதெல்லாம் அது மனித வாழ்விலும், பூமியிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஜோதிடங்களின்படி 2026 ஆம் ஆண்டு குருவின் ஆதிக்கத்தில் இருக்கும் மீன ராசியில் சனி பகவான் உதயமாக இருக்கிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் சனி உதிப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக மூன்று ராசிகளுக்கு அபரிமிதமான முன்னேற்ற வாய்ப்புகளை உருவாக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
24
ரிஷபம்
சனி பகவானின் இந்த உதயம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான சூழலை ஏற்படுத்த உள்ளது.
சனி பகவான் உங்கள் ராசியில் இருந்து 11-வது வீடான லாப ஸ்தானத்தில் உதயம் ஆகிறார். ரிஷப ராசியின் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானம் மற்றும் பத்தாவது வீடான கர்ம ஸ்தானத்தின் அதிபதியாகவும் அவர் விளங்கி வருகிறார்.
எனவே சனி பகவானின் இந்த உதயமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் தரவுள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் அற்புதமான வெற்றியை அடைய இருக்கிறீர்கள்.
வருமானம் கணிசமாக அதிகரிக்கும். பணியில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த திட்டங்கள் வேகம் எடுக்கும்.
பங்குச்சந்தை முதலீடுகள் போன்றவற்றின் மூலம் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
சனி பகவான் உங்கள் ராசியில் இருந்து மூன்றாவது ஸ்தானத்தில் உதயம் ஆகிறார். இந்த வீடானது சகோதரர்கள், வீரம் ஆகியவற்றை குறிக்கும் இடமாகும்.
இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியைப் பெறுவீர்கள். உங்கள் தைரியம் மற்றும் திறமை அதிகரிக்கும். ச
கோதரர்கள் மற்றும் சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை உயரும். முதலீடுகள், கூட்டாண்மை அல்லது திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.
பணியில் கவுரவம் உயரும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பம் மற்றும் சமூக வட்டத்தில் உங்கள் அங்கீகாரமும், மரியாதையும் அதிகரிக்கும்.
இந்த காலகட்டத்தில் நீங்கள் புதிய வாகனம் அல்லது அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டு.
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் உதயம் லாபத்தை அளிப்பதாக இருக்கும். சனி பகவான் உங்கள் ராசியில் இருந்து கர்ம ஸ்தானமான பத்தாவது வீட்டில் உதயமாகிறார்.
மிதுன ராசியின் எட்டாம் மற்றும் ஒன்பதாம் வீடுகளின் அதிபதியாகவும் திகழ்ந்து வருகிறார். எனவே இந்த காலகட்டத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
பணியிடத்தில் நல்ல செய்திகள் கிடைக்கலாம். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பொருளாதார நிலைத்தன்மை உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பும், நண்பர்களிடமிருந்து நல்ல செய்திகளும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இந்த காலகட்டத்தில் தன லாபம் உண்டாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)