Samudrik Shastra: பெண்களின் வலது கண் துடிப்பது நல்ல சகுணமா? கெட்ட சகுணமா? சாமுத்ரிகா சாஸ்திரம் கூறுவது என்ன?

Published : Nov 21, 2025, 12:35 PM IST

Samudrika Lakshanam: பெண்களின் வலது கண் துடிப்பது என்பது வெறும் தற்செயல் நிகழ்வு மட்டுமல்ல. அது ஒரு நல்ல அல்லது கெட்ட சகுணமாகவும் இருக்கலாம். இது குறித்து சாமுத்திரிகா சாஸ்திரம் என்ன கூறுகிறது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
கண் இமைகள் துடித்தல்

கண்கள் துடிப்பது என்பது ஒரு பொதுவான உடல் நிகழ்வாகும். இது யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அறிவியல் பூர்வமாக இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இந்திய பாரம்பரிய சாஸ்திரங்களான சாமுத்திரிகா சாஸ்திரம் மற்றும் ஜோதிடம் ஆகியவற்றின்படி இது எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நல்ல அல்லது கெட்ட நிகழ்வுகளில் அறிகுறியாக கருதப்படுகிறது. பெண்களின் வலது கண் துடிப்பது குறித்து சாமுத்திரிகா சாஸ்திரம் கூறும் கருத்துக்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

அசுப அறிகுறிகள்

பெண்களின் வலது கண்கள் துடிப்பது சாமுத்திரிகா சாஸ்திரத்தில் சுபமான அறிகுறியாக கருதப்படுவதில்லை. இது அசுப அறிகுறியாகவே கருதப்படுகிறது. இது எதிர்காலாத்தில் வரவிருக்கும் பிரச்சனை, மன அழுத்தம், வீடு அல்லது குடும்பத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் ஆகியவற்றின் அறிகுறிகளாக இருக்கலாம். நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் மனக்கசப்பு அல்லது சண்டை ஏற்பட வாய்ப்பு இருப்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. வேலை மற்றும் காரியத்தில் தடைகள், பணியிடத்தில் பிரச்சனைகள் அல்லது முக்கியமான வேலைகளில் தாமதங்கள் ஏற்படலாம். விரும்பத்தகாத நிகழ்வுகள் அல்லது கண் திருஷ்டி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

பரிகாரங்கள்

சில சமயங்களில் இது உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம். ஆண்களுக்கு வலது கண் துடிப்பது பொதுவாக சுபமாக கருதப்படுகிறது. ஆனால் பெண்களுக்கு அது அவ்வாறு கருதப்படுவதில்லை. மாறாக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. வலது கண் துடிக்கும் பொழுது ஏற்படும் எதிர்மறை ஆற்றலை குறைக்க சாமுத்திரிகா சாஸ்திரத்தில் சில எளிய பரிகாரங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. கண்களில் சிறிது கங்கா தீர்த்தம் தெளித்து இறைவனை மனதாரப் பிரார்த்தனை செய்யலாம். எதிர்மறை ஆற்றல்களில் இருந்து தப்பிக்க அனுமனை வழிபடலாம். அனுமனின் நாமங்கள் மற்றும் மந்திரங்களை பாராயணம் செய்வது நேர்மறை ஆற்றல்களை பரப்பும்.

இடது கண் துடித்தால் என்ன அர்த்தம்

தேவைப்படுபவர்களுக்கு வெள்ளை நிறப் பொருட்கள், பால், அரிசி, துணி ஆகியவற்றை தானம் செய்யலாம். துளசி இலைகளை சாப்பிடுவதும் நன்மை பயக்கும். பெண்களின் இடது கண் துடிப்பது பொதுவாக சுபமாக கருதப்படுகிறது. இது நல்ல செய்தி வர இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும். பண வரவு அல்லது காரியத்தில் வெற்றி ஆகியவற்றை குறிப்பதாக கருதப்படுகிறது. பெண்களின் இடது கண் இமை அல்லது புருவம் துடிப்பது எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி பெறுவது, தொழில் முன்னேற்றம், நிதி ஆதாயம் அல்லது முக்கிய காரியங்களில் வெற்றி பெறுவதற்கான சாத்தியத்தை குறிப்பதாக உள்ளது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories