Astrology: நவம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்.! 4 ராசிகள் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப் போகுது.!

Published : Nov 21, 2025, 11:37 AM IST

Lakshmi Narayan Yog 2025: நவம்பர் மாத இறுதியில் புதன் பகவான் சுக்கிரன் பகவானுடன் இணைகிறார். இந்த சேர்க்கை 'லட்சுமி நாராயண யோகம்' என்று அழைக்கப்படும் மிகவும் சக்திவாய்ந்த ராஜயோகத்தை உருவாக்குகிறது. 

PREV
15
லட்சுமி நாராயண யோகம் 2025

வேத ஜோதிடத்தில் புதன் பகவான் பேச்சு, அறிவு, படிப்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். சுக்கிர பகவான் செல்வம், ஆடம்பரம், வசதி, கலை, காதல், திருமண இன்பம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றின் காரகராவார். விஷ்ணுவின் அம்சமான புதன் பகவானும், லட்சுமியின் அம்சமான சுக்கிரனும் ஒரே ராசியில் இணையும்போது, லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. 

இது செல்வத்தையும், ஞானத்தையும் ஒருசேர அள்ளித்தரும் சுப யோகமாக இது கருதப்படுகிறது. துலாம் ராசியானது சுக்கிரனின் ஆட்சி வீடு என்பதால், இந்த யோகம் மேலும் வலுப்பெற்று, சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களைத் தரும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

25
1. மிதுனம்

மிதுன ராசியின் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இந்த ராஜயோகம் உருவாகிறது. மிதுன ராசியின் அதிபதி புதன் என்பதால், இந்த யோகம் மிதுன ராசியினருக்கு மிகவும் சாதகமாக அமையும். இந்த காலக்கட்டத்தில் திடீர் பண வரவு மற்றும் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை மற்றும் பிற முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். 

மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலை மற்றும் படைப்பாற்றல் துறையில் இருப்பவர்களுக்குப் புகழும், அங்கீகாரமும் தேடி வரும். குடும்ப உறவுகள் மேம்படும். ஐந்தாம் வீடானது புத்திர ஸ்தாதனத்தை குறிக்கும் வீடு என்பதால், சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.

35
2. கடகம்

இந்த யோகம் கடக ராசிக்கு நான்காம் வீட்டில் உருவாகிறது. நான்காம் வீடானது சுக ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. சுகம் தரும் இடத்தில் இந்த யோகம் உருவாவதால், அன்னை லட்சுமியின் அருள் கடக ராசிக்காரர்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். புதிய வீடு, வாகனம், அல்லது சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். 

குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலை மற்றும் தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதன் மூலம் நிதி நிலை வலுப்பெறும். ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான வசதிகள் சேரும்.

45
3. துலாம்

இந்த யோகம் உங்கள் ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் உருவாகிறது. சுக்கிரன் உங்கள் ராசிநாதன் என்பதால், இந்த யோகம் உங்களுக்கு ஒரு ராஜயோகமாக அமையும். இந்த காலக்கட்டத்தில் உங்களின் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும், உங்கள் ஆளுமையும் கௌரவமும் உயரும். 

சமூகத்திலும் பணியிடத்திலும் அங்கீகாரமும், புகழும் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலைமை சீரடையும். திருமணம் மற்றும் கூட்டாண்மை முயற்சிகள் வெற்றி பெறும், திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

55
4. விருச்சிகம்

இந்த யோகம் விருச்சிக ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் (விரய ஸ்தானம், வெளிநாடு, செலவுகள்) உருவாகிறது. 12-ல் யோகம் உருவாவது வெளிநாடு சம்பந்தமான விஷயங்களில் லாபம் தரும். வியாபாரம் செய்து வருபர்களுக்குப் பெரிய வெற்றி உண்டாகும். பொருளாதார நிலை உயரும். 

முதலீடுகளிலிருந்து லாபம் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணங்கள், வேலை அல்லது உயர் கல்விக்கான வாய்ப்புகள் கைகூடும். செலவுகள் இருந்தாலும், அவை சுபச் செலவுகளாக மாறும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories