எந்த மாதத்திலும் 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 2. இது சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ளது. இவர்கள் அதிகம் யோசிப்பார்கள், சுறுசுறுப்பாக இருக்க மாட்டார்கள். தாமதமாக எழுவது, வேலைகளை தாமதமாக தொடங்குவது, சிறிய வேலைகளுக்கு கூட நீண்ட நேரம் எடுப்பது போன்ற பழக்கங்கள் இந்த தேதியில் பிறந்தவர்களிடம் அதிகமாகவே இருக்கும் என்கிறது எண் கணிதம்.