Sevvai Peyarchi: அபிஜித் நட்சத்திரத்தில் குடியேறும் செவ்வாய் பகவான்.! 4 ராசிகளின் ஜாதகமே மாறப்போகுது.!

Published : Jan 26, 2026, 12:56 PM IST

Mars Transit in Abhijit Nakshatra: சில தினங்களில் செவ்வாய் பகவான் அபிஜித் நட்சத்திரத்தில் நுழைய இருக்கிறார். இது சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான நன்மைகளை வழங்க இருக்கிறது. அது குறித்து இங்கு காணலாம்.

PREV
15
செவ்வாய் நட்சத்திரப் பெயர்ச்சி 2026

நட்சத்திரங்களில் அபிஜித் நட்சத்திரம் 28வது நட்சத்திரமாக அறியப்படுகிறது. இந்த நட்சத்திரம் மங்களகரமானது மற்றும் தோஷமற்றது. ஜனவரி 24 அன்று செவ்வாய் பகவான் இந்த நட்சத்திரத்திற்குள் நுழைந்து ஜனவரி 30 வரை அங்கேயே இருப்பார். இந்த காலகட்டத்தில், நான்கு ராசிக்காரர்களுக்கு அதிக அதிர்ஷ்டம் கிடைக்கும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

25
மேஷம்

அபிஜித் நட்சத்திரத்தில் செவ்வாய் நுழைவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் உண்டாகும். அதிர்ஷ்டம் கூடிவரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். செல்வம் பெருகும். பணக்கஷ்டம் நீங்கும். நிலுவையில் உள்ள பணிகள் முடியும். நிலம் வாங்கும் யோகம் உண்டு. எடுக்கும் முடிவுகள் நிதிப் பலன்களைத் தரும்.

35
சிம்மம்

அபிஜித் நட்சத்திரத்தில் செவ்வாய் சஞ்சாரம் சிம்ம ராசிக்கு உயர்வான கௌரவத்தை தரும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு பலம் கூடும். பணியிடத்தில் மரியாதை கிடைக்கும். புதிய பதவிகள், பொறுப்புகள் வர வாய்ப்புள்ளது. நிதி ரீதியாகவும் நல்ல முடிவுகள் கிடைக்கும்.

45
விருச்சிகம்

செவ்வாய் சஞ்சாரத்தால் விருச்சிக ராசிக்காரர்கள் அபரிமிதமான வளர்ச்சியைக் காண்பார்கள். கடினமான சூழல்களைக் கடக்கத் தேவையான தைரியம் கிடைக்கும். துணிச்சலான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பார்கள். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும். வாழ்வில் நேர்மறை மாற்றங்கள் ஏற்படும். மன அழுத்தம் குறையும்.

55
மீனம்

அபிஜித் நட்சத்திரத்திற்கு செவ்வாய் செல்வதால் மீன ராசிக்கு சுப பலன்கள் கிடைக்கும். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். தொழிலில் உயர்ந்த நிலையை அடைவீர்கள். பணியிடத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நிதி நிலைமை சீராகும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு வரும். வாழ்வில் ஒழுக்கம் அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories