சனி புதன் உருவாக்கும் அரிய அர்த்த கேந்திர ராஜயோகம்.! இந்த ராசிகளுக்கு அரசு வேலை தேடி வரப்போகுது.!

Published : Jan 26, 2026, 11:29 AM IST

Ardh Kendra Yog 2026: சனி மற்றும் புதன் கிரகங்களின் சேர்க்கையால் ஜனவரி 28 அன்று அரிய அர்த்த கேந்திர யோகம் உருவாக உள்ளது. இதனால் சில ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
அர்த்த கேந்திர யோகம் 2026

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் அவற்றின் கோண நிலைகள் மனித வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக கர்ம காரகனான சனி மற்றும் புத்திசாலித்தனம், வியாபாரத்திற்கு அதிபதியான புதன் ஒரு குறிப்பிட்ட நிலையில் சேரும்போது, அதன் தாக்கம் அபரிமிதமாக இருக்கும். 

சனி புதனின் அரிய சேர்க்கையால் ஜனவரி 28 அன்று அர்த்த கேந்திர யோகம் உருவாக இருக்கிறது. சனி மீன ராசியிலும், புதன் மகர ராசியிலும் 45 டிகிரி கோணத்தில் அமைந்து இந்த யோகத்தை உருவாக்குகின்றனர். இந்த இரு கிரகங்களின் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு பெரும் நன்மைகளைத் தர உள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன்களைத் தரும். மூன்றாம் வீட்டில் உள்ள சனி உங்கள் தைரியத்தை அதிகரிப்பார். ஒன்பதாம் வீட்டில் உள்ள புதன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை துணை நிற்கச் செய்வார். தொழில் ரீதியாக புதிய பொறுப்புகளை ஏற்கும் வாய்ப்பு உள்ளது. 

வியாபாரிகளுக்கு நீண்ட தூர பயணங்களால் நல்ல லாபம் கிடைக்கும். மீடியா, மார்க்கெட்டிங், கம்யூனிகேஷன், எழுத்துத் துறையில் உள்ளவர்களுக்கு இது ஒரு பொற்காலமாக அமையும். உடன்பிறந்தவர்களுடன் உறவுகள் வலுப்படும். உங்கள் முயற்சிகளுக்கு இறைவனின் அருளும் துணை நிற்கும்.

35
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் போராட்ட குணத்தை அளித்து, வெற்றிகளைத் தேடித் தரும். ஆறாம் வீட்டில் உள்ள சனி எதிரிகளையும், தடைகளையும் கட்டுப்படுத்த உதவுவார். எட்டாம் வீட்டில் உள்ள புதன் திடீர் லாபங்களையும், அறிவையும் அதிகரிப்பார். 

நீதிமன்ற வழக்குகள் அல்லது சட்டப் பிரச்சனைகளில் சிக்கியவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலையில் உங்கள் போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறுவீர்கள். உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். அரசு மற்றும் தனியார் துறைகளில் இருப்பவர்களுக்கு சிறப்பு லாபம் உண்டு. மனதளவில் மேலும் வலிமையடைவீர்கள்.

45
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த அர்த்த கேந்திர யோகம் ஆளுமை வளர்ச்சிக்கும், அதிர்ஷ்டத்திற்கும் கதவுகளைத் திறக்கும். லக்னத்தில் உள்ள சனி உங்களை மேலும் பொறுப்புள்ள, ஒழுக்கமான நபராக மாற்றுவார். ஒன்பதாம் வீட்டில் உள்ள புதன் உங்கள் அதிர்ஷ்டத்தையும், புதிய வாய்ப்புகளையும் வழங்குவார். 

அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். உயர்கல்வி, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்கு இந்த நேரம் வெற்றிகரமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் முடிவெடுக்கும் திறன் வலுப்பெறும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் இப்போது வேகம் பெறும்.

55
முக்கிய குறிப்பு

சனி, புதன் சேர்க்கை தனிப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக வர்த்தகத் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒழுக்கமான முதலீடுகள், நீண்ட கால திட்டங்கள் வகுப்பவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். 

இந்த யோகம் சுப பலன்களைத் தந்தாலும், சனியின் தாக்கம் இருப்பதால் குறுக்கு வழிகளைத் தவிர்க்க வேண்டும். நேர்மையாக உழைப்பவர்களுக்கு மட்டுமே சனி முழுமையான பலன்களைத் தருவார். குறிப்பாக சிம்மம், மீனம், ரிஷபம் ராசிக்காரர்கள் இந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் வாழ்வில் உயர் நிலையை அடையலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories