கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் ராசியின் அதிபதி புதன் பகவான் சூரியனுடன் இணைந்து புதாதித்ய யோகத்தை ஏற்படுத்துகிறார். சூரியன் கன்னி ராசியின் விரயாதிபதி என்பதால் சுப விரயங்கள் உண்டாகலாம். அதிக முதலீடுகளுடன் புதிய தொழில் தொடங்குவதை தவிர்க்கவும். எந்த ஒரு செயலையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்ய வேண்டும்.
பொதுவான பலன்கள்:
இந்த வாரம் குழப்பங்கள் நீடித்தாலும் இறுதியில் சாதகமான முடிவுகள் கிடைக்கும் வாரமாக இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்வதன் மூலம் தடைகளை தகர்க்க முடியும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. நீண்ட நாள் இழுபறியில் இருந்த விஷயம் இந்த வார இறுதியில் சுமூகமாக முடியும்.
நிதி நிலைமை:
இந்த வாரம் நிதி நிலைமை சீராக இருக்கும். பொன், பொருள் வாங்கும் பாக்கியம் உண்டாகும். வீடு வாங்கும் முயற்சியில் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். சொத்து சம்பந்தமான தகராறுகள் முடிவுக்கு வரும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பழைய வாகனங்கள் அல்லது வீட்டு மராமத்து தொடர்பான செலவுகள் ஏற்படக்கூடும்.
வேலை மற்றும் தொழில்:
குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு கைநிறைய சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வாடிக்கையாளர்களின் வரத்து அதிகரிப்பால் தொழில் சிறக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன்னர் ஆவணங்களை சரிபார்க்கவும். சிறு தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
குடும்ப உறவுகள்:
இந்த வாரம் குடும்ப உறவுகள் சுமாராக இருக்கும். கணவன் மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். மௌனம் காப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது அமைதியைத் தரும். பிள்ளைகளின் பிடிவாத குணம் கவலையைத் தரலாம். அவர்களை விட்டு பிடிப்பது நல்லது. சகோதரர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கலாம்.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
கண் எரிச்சல், ஒற்றைத் தலைவலி அல்லது நரம்பு சம்பந்தமான சிறு உபாதைகள் வரலாம். சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்வது, வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை தவிர்க்க உதவும்.
மாணவர்கள் படிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். பொழுதுபோக்கு விஷயங்கள் கவனிச்சிதறலை ஏற்படுத்தலாம். உயர்கல்வி விரும்பும் கற்க விரும்பும் மாணவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
இந்த வாரம் 25-01-2026 பகல் 1:36 மணி முதல் 27-01-2026 மாலை 4:45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். உங்கள் பணியில் மட்டும் கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம்.
பரிகாரங்கள்:
மகாவிஷ்ணுவிற்கு துளசி மாலை சாற்றி வழிபடுவது நல்லது. விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது அல்லது வாசிப்பது நேர்மறை ஆற்றல்களைத் தரும். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றவும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது பொருளாதார ஏற்றத்தைத் தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)