சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உள்ளம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் வாரமாக இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்.
பொதுவான பலன்கள்:
சிம்ம ராசி நேயர்களே இந்த வாரம் நல்ல பலன்கள் கிடைக்கும் வாரமாக இருக்கும். பதவி உயர்வு, கவுரவ பதவிகள் தேடி வரும். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த காத்திருந்த காரியங்கள் சமூகமாக முடியும். வராத பழைய கடன்கள் வசூலாகும். ஆளுமைத் திறன் வெளிப்படும். அரசு காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
நிதி நிலைமை:
பண வரவு திருப்திகரமாக இருக்கும். குறிப்பாக 27, 28 ஆகிய தேதிகளில் பணவரவு இரட்டிப்பாக கிடைக்கும். வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்கும் முயற்சிகள் கைகூடும். சொத்து விற்பனை மூலம் பெரிய பணம் கைக்கு கிடைக்கும். பொருளாதார பற்றாக்குறை அகலும். மருத்துவச் செலவுகள் குறையும்.
வேலை மற்றும் தொழில்:
பணி நீட்டிப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அரசு வேலை அல்லது ஒப்பந்தங்களுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த அரசு வேலை கிடைக்கும். திருப்தியான நல்ல வருமானம் கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு படிப்பிற்க்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். வருமான பற்றாக்குறையால் தவித்து வருபவர்களுக்கு உபரி வருமானத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
குடும்ப உறவுகள்:
குடும்ப உறவுகளில் இந்த வாரம் நல்ல முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் தீர்க்கப்படும். தந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். குழந்தைகள் மூலம் குடும்பத்தில் பெருமை உண்டாகும்.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
செவ்வாய் பகவானின் நிலை காரணமாக ரத்த அழுத்தம் அல்லது உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். கண் எரிச்சல் அல்லது உடல் உஷ்ணம் ஏற்படும். இருப்பினும் ஆரோக்கியத் தொல்லைகள் அகன்று மருத்துவ செலவுகள் குறையத் தொடங்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் சிறந்த பலன்கள் கிடைக்கும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு விசா கிடைக்கலாம். கடினமான பாடங்களையும் எளிதாகப் புரிந்து கொள்வீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
இந்த வாரம் 25-01-2026 அன்று 01:36 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தொழிலில் அதிக முதலீடுகளை செய்யக்கூடாது. வாகனம் ஓட்டும் பொழுது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பரிகாரங்கள்:
தினமும் சூரிய உதயத்தின் பொழுது சூரிய நமஸ்காரம் செய்வது நன்மைகளைத் தரும். முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர் சாற்றி வழிபட தேவையற்ற கோபம், ரத்தம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். ஏழை மாணவர்களின் கல்விக்கு எழுதுப் பொருட்கள் அல்லது நோட்டு புத்தகங்கள் வழங்குவது நன்மைகளை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)