Sevvai Peyarchi 2025: குரு பகவான் வீட்டில் அமர்ந்த செவ்வாய்.! 5 ராசிகள் வீட்டில் பண மழை பொழியும்.! பேங்க் பேலன்ஸ் உயரும்.!

Published : Dec 26, 2025, 11:34 AM IST

Sevvai Peyarchi 2025 Rasi Palangal: கிரகங்களின் தளபதியாக விளங்கி வரும் செவ்வாய் பகவான் தனுசு ராசியின் பூராட நட்சத்திரத்திற்கு இடம் பெயர்ந்துள்ளார். செவ்வாயின் இந்த பெயர்ச்சியால் டிசம்பர் இறுதி முதல் 5 ராசிகள் சிறப்பான நன்மைகளை அனுபவிக்க உள்ளனர்.

PREV
16
செவ்வாய் பகவான் நட்சத்திரப் பெயர்ச்சி

வேத ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் கிரகங்களின் தளபதியாக அறியப்படுகிறார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். அதே போல் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். இந்த நிலையில் அவர் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்திற்கு இடம் பெயர்ந்திருக்கிறார். இந்த பெயர்ச்சி டிசம்பர் 25, 2025 பிற்பகல் 2:00 மணியளவில் நடைபெற்றது.

பூராட நட்சத்திரம் சுக்கிர பகவானின் ஆளுகைக்கு கீழ் இருப்பதால் இந்த பெயர்ச்சி முக்கியமானதாக கருதப்படுகிறது. செவ்வாய்(நெருப்பு), சுக்கிரன்(ஆசை,சுகபோகம்), குரு (ஞானம்) ஆகிய மூன்றும் இணைந்து சில ராசிகளுக்கு மிகப்பெரிய யோகங்களை வழங்கப்போகிறது. குறிப்பாக மூன்று ராசிகள் நீண்டகால அதிர்ஷ்டத்தைப் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

26
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும். ஆற்றல் மற்றும் தைரியத்தின் காரகரான செவ்வாய் பகவான் உங்களுக்கு சுறுசுறுப்பையும், தன்னம்பிக்கையும் வழங்குவார். நீண்ட காலமாக தடைபட்டு நின்ற அல்லது தாமதமாகி வரும் வேலைகள் இந்த காலகட்டத்தில் முடிவடையும். நீங்கள் தொடங்கும் ஒவ்வொரு திட்டமும் வெற்றியில் முடியும். நிதி ஆதாயத்திற்கான புதிய வாய்ப்புகள் திறக்கப்படும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு உங்களை மேலும் முன்னேற்றி நகர்த்திச் செல்லும். உங்கள் யோசனைகள் மற்றும் வியூகங்கள் மூலம் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றியைப் பெறுவீர்கள்.

36
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சி புதிய அத்தியாயங்களை திறக்க இருக்கிறது. சில மாதங்களாக கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து வந்தவர்கள் இனி மகிழ்ச்சியை காண இருக்கின்றனர். இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகளுக்கும் இனி முழுமையான தீர்வு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வாழ்க்கைக்குத் தேவையான புதிதாக ஏதாவது ஒன்றை வாங்குவீர்கள். உறவுகளில் இருந்த மனக்கசப்புகளை சரி செய்வீர்கள். செவ்வாய் பகவானின் ஆற்றல் காரணமாக உங்கள் முடிவெடுக்கும் திறன் மேம்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைக் காண்பீர்கள்.

46
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியானது புதிய உற்சாகத்தையும், ஆற்றலையும் வழங்கும். உங்கள் தலைமைத்துவத் திறன்கள் வெளிப்படும். கடினமான சூழ்நிலையிலும் உறுதியான முடிவுகளை எடுத்து வெற்றிகளைப் பெறுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை உயர்ந்து காணப்படும். நிதி சார்ந்த விஷயங்களில் குழப்பங்கள் விலகி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். புதிய முதலீட்டுத் திட்டங்கள் அல்லது ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையலாம். சொத்து தொடர்பான பிரச்சனைகள் விலகும். உங்கள் முடிவுகள் துல்லியமாக இருக்கும். பணியிடத்தில் வேலைகளை கச்சிதமாக முடித்து வெற்றிகளைக் குவிப்பீர்கள்.

56
விருச்சிகம்

விருச்சிக ராசியை செவ்வாய் பகவான் ஆள்கிறார். எனவே செவ்வாயின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி விருச்சிக ராசிக்கு நேர்மறையான மாற்றங்களைக் கொடுக்கும். விருச்சிக ராசியினர் துன்பங்களில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள். முறிந்த பழைய உறவுகள் மீண்டும் புதுப்பிக்கப்படும். இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலைமை மேம்படும். தங்கம், வெள்ளி, நிலம், மனை, சொத்துக்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வீர்கள். ஏற்கனவே செய்த பழைய முதலீடுகள் லாபகரமானதாக மாறும். சொத்து தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீதிமன்ற வழக்குகள் உங்கள் வசமாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சலசலப்புகள் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும்.

66
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் செவ்வாய் பகவானின் முழு ஆசியும் கிடைக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எந்த சவாலையும் எளிதாக எதிர்கொண்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். உங்கள் தொழிலில் இருந்த பிரச்சனைகள் விலகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழிலை தொடங்குவீர்கள். வாழ்க்கையில் இருந்த பழைய பிரச்சினைகள் தீர்க்கப்படும். நிதி ஆதாயத்திற்கான புதிய கதவுகள் திறக்கப்படும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். இந்த காலகட்டம் உங்களுக்கு புதிய வாய்ப்புகளையும், நேர்மறையான மாற்றங்களையும் கொண்டு வரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories