This Week Rasi Palan: மிதுன ராசி நேயர்களே..உங்களுக்கு வரும் காலம் வசந்த காலம் தான்.! வாழ்க்கையே மாறப்போகுது

Published : Aug 31, 2025, 03:06 PM IST

செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 ஆம் தேதி வரை மிதுன ராசிக்கான பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
13
மிதுன ராசிக்கான வார ராசிப் பலன்கள்

மிதுன ராசிக்கு இந்த வாரம் மிகுந்த நல்ல பலன்களைத் தரும். வீடு மாறுதல், இட மாறுதல், உத்தியோக மாற்றம், வியாபார மாறுதல், படிப்பு மாறுதல் என அனைத்து விதமான மாற்றங்களும் உங்கள் வாழ்வில் பல நன்மைகளை கொண்டு வரும். நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும் காலம் நெருங்கியுள்ளது. உங்கள் தைரியமும், நம்பிக்கையும் அதிகரிக்கும். சில சமயம் அதீத நம்பிக்கையால் அவசர முடிவுகள் எடுக்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே முடிவெடுப்பதற்கு முன்பு நன்கு யோசித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம்.
 

நிதி நிலைமை:

நிதி ரீதியாக இந்த வாரம் நல்ல பலன்களைத் தரும். எதிர்பாராத பணவரவு ஏற்படலாம். முதலீடுகள் மூலமாகவோ அல்லது முன்னோர்களின் சொத்துக்கள் மூலமாவோ வருமானம் கிடைக்கலாம். இருப்பினும் ஆடம்பர செலவுகளைத் தவிர்த்து, சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆன்லைன் பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை செய்வதற்கு முன் நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். நிதி ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கு புதன் கிழமைகளில் கணபதியை வழிபடுவது மற்றும் துளசி செடிக்கு நீர் ஊற்றுவது நன்மை தரும்.

23
தொழில் மற்றும் வியாபரம்:

தொழில் மற்றும் வியாபாரத்தில் கலவையான பலன்களைத் தரும். உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் அல்லது திட்டங்களை தொடங்கலாம். கூட்டு வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் பெரிய விஷயத்தை தொடங்கும் முன் எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் சிறு தவறான புரிதல்கள் கூட பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
 

ஆரோக்கியம்:

வாரத்தின் முதல் மூன்று நாட்களில் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் வாரத்தின் பிற்பகுதியில் சிறு உடல்நலப் பிரச்சனைகள், குறிப்பாக ரத்தம் அல்லது ரத்தம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் அல்லது யோகா போன்றவற்றை செய்யலாம். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வியாழக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது ஆரோக்கியம் மேம்பட வழிவகுக்கும்.

33
குடும்பம் மற்றும் உறவுகள்:

குடும்ப வாழ்க்கையில் இந்த வாரம் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். சகோதரர்கள் அல்லது நண்பர்களுடான சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். குல தெய்வ வழிபாடு செய்வது மற்றும் தர்ம காரியங்களில் ஈடுபடுவது மன நிம்மதியைத் தரும்.
 

ஆன்மிகம்:

புதன் கிழமைகளில் விநாயகர் அல்லது சரஸ்வதி தேவியை வழிபடுவது மன அமைதியைத் தரும். சனிக்கிழமையில் ஹனுமானை வழிபடுவது ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைத் தரும். ஆலமரத்திற்கு தண்ணீர் அல்லது பால் ஊற்றுவது உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.

Read more Photos on
click me!

Recommended Stories