மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதகமான சூழல் ஏற்படும். இதுவரை நிலவி வந்த கடன் பிரச்சனைகள் படிப்படியாக தீரும். மன அமைதி ஏற்படும். எதிர்பாராத பல நல்ல விஷயங்கள் நடக்கும். குழந்தைகளுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பீர்கள். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். செப்டம்பர் மாத முதல் வாரத்தில் நல்ல அனுகூலங்கள் ஏற்பட்டாலும், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
ஆரோக்கியம்:
வயிறு பிரச்சனை இருப்பவர்கள், கல்லீரல், சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இந்த வாரம் கவனத்துடன் செயல்படுங்கள். தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல அனுகூலம் ஏற்படும். சிலருக்கு சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. முறையாக திட்டமிட்டால் வீடு, மனை, வாகனம், அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகளை சந்தித்து வருபவர்களுக்கு, பிரச்சனைகள் முடிவுக்கு வந்து சொத்து அல்லது பணம் கைக்கு வந்து சேரலாம்.