கஷ்டம் கொடுத்தது போதுமுன்னு நல்லது செய்ய போகும் சனி: லச்சாதியாகும் ராசிக்காரங்க யாரெல்லாம்? 12 ராசிக்கான பலன்!

Published : Nov 14, 2024, 10:21 PM ISTUpdated : Nov 14, 2024, 10:28 PM IST

Saturn Transit 2024 in Aquarius Palan Tamil : கும்ப ராசியில் நேர்கதியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் 12 ராசிகளுக்கும் எந்த மாதிரியான பலனை கொடுக்கும் விரிவாக பார்க்கலாம்…

PREV
114
கஷ்டம் கொடுத்தது போதுமுன்னு நல்லது செய்ய போகும் சனி: லச்சாதியாகும் ராசிக்காரங்க யாரெல்லாம்? 12 ராசிக்கான பலன்!
Saturn Transit in Aquarius, Saturn Transit Palan Tamil

Saturn Transit in Aquarius : வான் மண்டலத்தில் பூமிக்கு மிக தொலைவில் உள்ள கிரகங்களில் ஒன்றான சனி, 2024 ஜூன் 30 அன்று தனது சஞ்சாரத்தை மாற்றியது. வக்ர கதியில் சஞ்சரித்து, பூர்வா பாதிரபதா இரண்டாம் பாதத்திலிருந்து பூர்வா பாதிரபதா 1 சதபிஷ நான்காம் பாதம் வரை பின்னோக்கி நகர்ந்து வந்தது.

கிரகங்களின் இந்த வக்ர சஞ்சாரத்திற்கு சிறப்பு பலன்களை சாஸ்திரம் கூறுகிறது. 'வக்ரிணஸ்து மஹாவீர்யா:' என்ற அடிப்படையில், ஒரு கிரகம் வக்ர கதியில் சஞ்சரிக்கும்போது மிகுந்த பலத்தைப் பெற்று, சில ராசிகளுக்கு சிறப்பு பலன்களைத் தரும். 'வக்ரகத: ஸ்வோச்சபலம் விதத்யாத்' என்ற மற்றொரு சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகம் உச்ச ஸ்தானத்தில் இருக்கும்போது எந்த பலனைக் கொடுக்கிறதோ, அதே பலனையே வக்ர கதியில் இருக்கும்போதும் கொடுக்கும்.

214
Saturn Transit in Aquarius, Saturn Transit Palan Tamil

எனவே, கிரகங்களின் வக்ர கதி ஒரு வகையில் சுப பலன்களையே தரும். அதில் சனியும் விதிவிலக்கல்ல. இத்தனை நாட்கள் சிலருக்கு அதிகார பலம், பதவி மாற்றம், உடல்நலம், கடன் நிவாரணம், தொழில் முன்னேற்றம், மனவேதனைக்கு விடுதலை என பல சுப பலன்களைத் தந்துள்ளது.

இப்போது, நவம்பர் 14 வியாழக்கிழமை முதல், சனி வக்ர கதியிலிருந்து மீண்டும் தனது சஞ்சாரத்தை சரிசெய்து முன்னேறும். மீண்டும் சதபிஷ நட்சத்திரத்திலிருந்து முன்னேறும். இத்தகைய சனியின் சஞ்சாரத்தால் எந்த ராசிகளுக்கு என்ன பலன் கிடைக்கும்? யாருக்கு சுபம்? யாருக்கு அசுபம்? தெரிந்து கொள்வோம்.

314
Saturn Transit in Aquarius, Saturn Transit Palan Tamil

மேஷம்:

தொழிலில் சிறப்பு லாபம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு உயர் பதவி, அதிகாரம் கிடைக்கும். சிவில் துறையினருக்கு நன்மைகள் உண்டாகும். புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். பெரியோர்களின் உதவி, சீனியர்களின் வழிகாட்டுதல் கிடைக்கப் பெறுவீர்கள். மொத்தத்தில் சனியின் இந்த வக்ர நிவர்த்தி மேஷ ராசிக்கு நன்மையான பலனையே தரும்.

பரிகாரம்: சிவன் சன்னதியில் அர்ச்சனை செய்வது நல்லது.

414
Saturn Transit in Aquarius, Saturn Transit Palan Tamil

ரிஷபம்:

தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசியல் லாபம் உண்டாகும். இரும்பு, சிமெண்ட், மண், செராமிக் துறையினருக்கு லாபம் கிடைக்கப் பெறும். தொழிலாளர்களுக்கு நல்லது நடக்கும். பெரியோர்களின் மதிப்பு கூடும். அதிகார பலம் கிடைக்க பெறுவீர்கள். வியாபாரம் விரிவடையும்.

பரிகாரம்: சுப்பிரமணியர் தரிசனம் மேற்கொள்வது நன்மை அளிக்கும்.

கார்த்திகை மாத ராசி பலன், பரிகாரங்கள் – 9 கிரகங்களின் சப்போர்ட் கிடைக்குமா? ஆடை, ஆபரண சேர்க்கை உண்டா?

514
Saturn Transit in Aquarius, Saturn Transit Palan Tamil

மிதுனம்:

தந்தைக்கும், மகன் அல்லது மகள்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பாடும். குடும்பத்தில் சண்டை சச்சரவு அதிகரிக்கும். பெரியோர் வழிகாட்டுதல்படி நடப்பது நன்மை அளிக்கும். தர்ம காரிய ஆர்வம் அதிகரிகும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்றூ வருவீர்கள். தொழிலில் சிரமம் ஏற்படக் கூடும். சகோதரர்களுக்கிடையில் மனஸ்தாபம் ஏற்படும்.

பரிகாரம்:  விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்ய வேண்டும்.

மிதுன ராசிக்கான 2025 புத்தாண்டு ராசி பலன்: வெளிநாட்டு யோகம் தேடி வரும்; 2025ல் அதிர்ஷ்டசாலி ராசி நீங்களா?

614
Saturn Transit in Aquarius, Saturn Transit Palan Tamil

கடகம்:

உடல் ஆரோக்கியம் மேம்படும். சிறுநீரக நோய் பாதிப்பு வந்து நீங்கும். பகை உணர்வு ஏற்படும். தொழில் நன்மை உண்டாகும். பணக் கஷ்டம் ஏற்படக் கூடும். மாணவர் படிப்பில் ஆர்வம் காட்டுவது நல்லது. கடுமையான பேச்சுக்களை தவிர்ப்பது நன்மை அளிக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் பிரார்த்தனை செய்வது தைரியம் அதிகரிக்கும்.

2025 புத்தாண்டு கடக ராசி பலன் – உங்களுக்கான ஆண்டா? ராஜயோகம் அமையுமா? ஜாப், பிஸினஸ் எப்படி?

714
Saturn Transit in Aquarius, Saturn Transit Palan Tamil

சிம்மம்:

கணவன் மனைவிக்கிடையில் மனஸ்தாபம் ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தாம்பத்திய உறவில் விரிசல் ஏற்படக் கூடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிவில் துறையில் இருப்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் உண்டாகும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. கால், எலும்பு வலி ஏற்படக் கூடும். உறவினர் மற்றும் நண்பர்களிடத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

பரிகாரம்: ருத்ராபிஷேகம் அணிந்து கொள்வது நல்லது.

2025ல் சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்கு கர்ம சனி ஏற்படும்? ஜாலியா இருக்கலாமா? சனி ஆப்பு வைக்குமா?

814
Saturn Transit in Aquarius, Saturn Transit Palan Tamil

கன்னி:

எதிரிகள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். தந்தை மற்றும் உறவினர்களின் உதவி கிடைக்கும். தைரியம் அதிகரிக்கும். கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். செலவு அதிகரிக்கும். சிக்கமாக இருப்பது அவசியம். சகோதரர்களுக்கிடையில் மனஸ்தாபம் ஏற்படக் கூடும். மாணவர் நன்மை.

பரிகாரம்: நரசிம்மர் வழிபாடு செய்வது நன்மை அளிக்கும்.

12 ராசிகளுக்கான 2025 புத்தாண்டு பலன் - ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஒன் லைன் பலன் - யாருக்கு நல்லது நடக்கும்?

914
Saturn Transit in Aquarius, Saturn Transit Palan Tamil

துலாம்:

குழந்தைகள் விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குழப்பம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனை கேட்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையில் தாம்பத்ய உறவில் மனஸ்தாபம் ஏற்படும். வயிறு பிரச்சனை ஏற்படக் கூடும். மாணவர் படிப்பில் ஆர்வம் காட்டுவது நல்லது.

பரிகாரம்:

லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்ய வேண்டும். ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது அவசியம்.

ராகு கேது, சனி, குரு சஞ்சாரம்: 2025 புத்தாண்டு 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், ராஜ வாழ்க்கை கொடுக்குமா?

1014
Saturn Transit 2024 in Aquarius Palan Tamil

விருச்சிகம்:

பழைய வீட்டை புதுப்பது பற்றிய எண்ணம் மேலோங்கும். உறவினர் மற்றும் நண்பர்களின் உதவி கிடைக்கும். பழைய நண்பரின் மூலமாக உதவி கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

பரிகாரம்: துர்கா அஷ்டோத்திரம் சொல்ல வேண்டும்.

விருச்சிக ராசிக்கான 2025 புத்தாண்டு பலன் – Love மேரேஜ் நடக்குமா? லச்சாதிபதி யோகம் இருக்கா? வருமானம், வேலை?

1114
Aquarius Saturn Transit Palan Tamil, Sani Direct Peyarchi Palan, Sagittarius

தனுசு:

சகோதரர்களுக்கிடையில் ஒற்றுமை மேலோங்கும். தைரிய சாகச காரிய சித்தி ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நெருங்கிய உதவியாளர் உதவி கிடைக்கும். வீண் செலவு ஏற்படும். தைரியம் மற்றும் வீரம் அதிகரிக்கும்.

பரிகாரம்: குரு ஸ்தோத்திரம் சொல்ல வேண்டும்.

தனுசு ராசிக்கான 2025 புத்தாண்டு பலன் – ஒரு காலத்துல ஓஹோனு வாழ்ந்த ராசி - வேலை போகுமா? சம்பளம் கூடுமா?

1214
Saturn Transit in Aquarius, Saturn Transit Palan Tamil, Capricorn

மகரம்:

குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிதி உதவி கிடைக்கும். படிப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் கிடைக்கும். உணவில் கவனம் செலுத்த வேண்டும். அதிக ஆசை பிரச்சனையை ஏற்படுத்தும்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வடை மாலை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். 

மகர ராசிக்கான 2025 புத்தாண்டு பலன் – விடிவுகாலம் பிறக்குமா? முடிய போகுது ஏழரை, அள்ளி கொடுக்கும் சனி!

1314
Saturn Transit in Aquarius, Saturn Transit Palan Tamil

கும்பம்:

அரசியலில் நன்மை உண்டாகும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் உதவி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உடல் நலக் குறைவு ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

பரிகாரம்: சனி கவசம் பாடுவது நன்மை அளிக்கும்.

சனி அருளால் 2025ல் உச்சத்துக்கு செல்லும் ராசிக்காரங்க யாரெல்லாம்? ஜாக்பாட், வசதி வாய்ப்பு எல்லாமே இருக்குமா?

1414
Saturn Transit in Aquarius, Saturn Transit Palan Tamil, Pisces

மீனம்:

செலவு அதிகரிக்கும். நெருங்கியவர் இழப்பு ஏற்படக் கூடும். கால் பிரச்சனை வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வண்டியில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சரிவு ஏற்படக் கூடும்.

பரிகாரம்:

சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories