Saturn Rise in Pisces: 2026 ஏப்ரல் மாதம் சனி பகவான் மீன ராசியில் உதயமாக இருக்கிறார். இது பல ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி ரீதியான முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிடத்தில் சனி பகவான் நீதிமானாக அறியப்படுகிறார். இவர் மார்ச் 13, 2026 மாலை 7:30 மணிக்கு மீன ராசியில் அஸ்தமனம் ஆகிறார். பின்னர் ஏப்ரல் 2026 அதே மீன ராசியில் உதயமாகிறார். சனி பகவானின் இந்த மாற்றமானது சில ராசிகளுக்கு முன்னேற்றப் பாதைகளைத் திறக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் மற்றும் வருமான உயர்வு ஏற்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
24
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் உதயம் மிகவும் சாதகமாக இருக்கும். சனி பகவானின் பார்வை ரிஷப ராசியின் லாப வீட்டில் விழுவதால் பண ஆதாயம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வருமான உயர்வை உருவாக்கும். புதிய வருமானத்திற்கான வரிகள் திறக்கும் உங்கள் திட்டங்கள் சரியான திசைகள் நகரும் புதிய முதலீடுகள் லாபம் தரும்.
34
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவான் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வருவார். உங்கள் ஜாதகத்தின் தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் பார்வை விழுகிறது. இது உங்கள் வேலையில் முன்னேற்றத்தை வழங்கும். அலுவலகப் பணி அல்லது தொழில் செய்து வருபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். உங்கள் வேலையால் திருப்தி அடைந்த மேலதிகாரிகள் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு குறித்த பேச்சு வார்த்தைகளை தொடங்குவார்கள் குடும்ப உறவுகளில் நீடித்த நீண்ட கால பிரச்சனைகள் முடிவிற்கு வரும். ஆராய்ச்சி, கல்வி போன்ற படிப்பில் ஈடுபடுபவர்களுக்கு இந்த காலக்கட்டம் மிகவும் நன்மை தரும்.
மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவான் உற்சாகத்தையும், முன்னேற்றத்தையும் தருவார். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வேலை அல்லது திட்டங்களை தொடங்குவதற்கு இந்த காலகட்டம் சாதகமாக இருக்கும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதுவரை குழப்பமான மனநிலையில் இருந்து வந்தவர்கள் அதிலிருந்து முழுமையாக விடுபட்டு துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறவுகளில் இனிமை நீடிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)