Surya Grahanam 2026: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17 நிகழ உள்ளது. இந்த கிரகணத்தால் சில ராசிகளுக்கு கஷ்டங்கள் வரலாம். கிரகணம் இந்தியாவில் தெரியாவிட்டாலும் ராசிகளில் தாக்கம் இருக்கும். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
2026-ன் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17-ல் நிகழ்கிறது. சூரிய கிரகணம் என்பது சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் பொழுது ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வாகும். ஜோதிடத்தின்படி, சூரியனும், ராகுவும் இணைவதால் கிரகண யோகம் உருவாகிறது. இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
24
கடகம்
கடக ராசியின் 8-ம் வீட்டில் கிரகண யோகம் ஏற்படுகிறது. ஜோதிடத்தில் அஷ்டம ஸ்தானம்(எட்டாம் வீடு) என்பது ஆயுள், மரணம், விபத்து, தடைகள், அவமானம், நீண்ட கால நோய்கள் மற்றும் மறைமுகமான விஷயங்களைக் குறிக்கும் வீடாகும். கிரகண யோகம் 8 ஆம் வீட்டில் நிகழ்வதால் திடீர் தடைகள், உடல்நலப் பிரச்சனைகள் வரலாம். இதய நோயாளிகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணை உடன் தகராறுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். சேமிப்புகள் கரையக்கூடும் என்பதால் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
34
கன்னி
கன்னி ராசிக்கு சூரியன் ராகு சேர்க்கையால் பாதகமான சூழல் ஏற்படும். பணிகளில் தடைகள் ஏற்படலாம். பணியிடத்தில் உங்களுக்கு எதிராக விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறலாம். இதன் காரணமாக வேலை இழப்பு, நிதி இழப்பு போன்றவையும் ஏற்படக்கூடும். சமூகத்தில் உங்கள் நற்பெயருக்கு களங்கள் ஏற்படலாம் அல்லது மரியாதைக்கு பாதிப்பு ஏற்படலாம். சொத்து ஆவணங்களில் கையெழுத்திடும் முன் அதிக கவனம் தேவை. ஆவணங்களை படித்து பார்த்து அதன் பின்னர் கையொப்பமிடுவது நல்லது. பணம் சார்ந்த விஷயங்களில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.
மீன ராசிக்கு கிரகண யோகம் 12-ம் வீட்டில் நிகழ இருக்கிறது. ஜோதிடத்தின்படி 12 ஆம் வீடு என்பது விரய ஸ்தானமாகும். இது எதிர்பாராத செலவுகள் மற்றும் நிதி இழப்புகளை குறிக்கும் இடமாகும். சூரியன் மற்றும் ராகுவின் சேர்க்கை 12 ஆம் வீட்டில் நிகழ்வதால் தேவையற்ற செலவுகள் அல்லது மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவுகளில் விரிசல் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்படக்கூடும். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்திற்கு அதிக பணம் செலவிட நேரிடும் என்பதால் உடல்நலனில் கூடுதல் கவனம் தேவை.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)