Top 5 Nakshatras of People Who Keep Their Promises : பொதுவாகவே ஜோதிட ரீதியாக பார்க்கையில் 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு விதமான குணதிசியங்கள் இருக்கும். எந்த சூழலிலும் தப்பு செய்யாமல் உண்மையாக வாழக் கூடிய நட்சத்திரக்காரர்களும் சிலர் இருக்கிறார்கள்.
Top 5 Nakshatras of People Who Keep Their Promises : இந்த நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான் ஆவார். நவகிரகங்களின் தலைவனான சூரியனின் ஆதிக்கம் இருப்பதால், இவர்களது வாழ்வில் நேர்மையும் தர்மமும் இரு கண்களைப் போல இருக்கும். பேர், புகழ், அந்தஸ்தை விட சுயமரியாதை தான் முக்கியம் என்று வாழக்கூடியவர்கள் தான் உத்திரம் நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள். எப்போதும் தர்மத்தின் வழியில் நின்று மற்றவர்களுக்கு ரோல் மாடலாக திகழக்கூடியவர்கள் தான் இந்த நட்சத்திரக்காரர்கள்.
23
பூசம்: நீதியின் வடிவம்; நேர்மையின் சிகரம்!
இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் ஆவார். சனியின் ஆதிக்கம் இருப்பதால், இவர்கள் எப்போதுமே நீதிக்கும் நியாயத்திற்கும் கட்டுப்பட்டு நடப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் இவரை நம்பி கொடுத்தால் அதனை தார்மீக ரீதியாக தங்களது கடமையாகவே நினைப்பார்கள். இப்படி தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்று பட டயலாக் வருகிறதோ அதே போன்று தான் சொன்ன வாக்கை மீறுவது என்பது இவர்களது அகராதியிலேயே கிடையாது. எந்த சூழலிலும் நேர்மை மாறாமல் வாழக்கூடியவர்கள் தான் இவர்கள்.
33
ரோகிணி: அசைக்க முடியாத உறுதி
இந்த நட்சத்திரத்தின் அதிபதி சந்திர பகவான் ஆவார். சந்திரன் மனோகாரகன் என்பதால், இவர்களது மன உறுதி மிகவும் வலிமையானதாக இருக்கும். ஆனால் அழகானவர்கள். இவர்கள் எடுக்கும் முடிவுகளில் ஒரு தெளிவும், நிதானமான தன்மையும் இருக்கும். விஜய்யின் படத்தில் வரும் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேனா என்னுடைய பேச்சை நானே கேட்கமாட்டேன் என்று வரும் டயலாக்கிற்கு ஏற்ப எடுத்த முடிவிலிருந்து பின் வாங்காத நட்சத்திரக்காரர்கள் இவர்கள் தான்.