Rasi Palan 2026: பிப்ரவரியில் 5 கிரக பெயர்ச்சிகள்.! இந்த 3 ராசிகள் மிகவும் கவனமா இருக்கணும்.! கஷ்ட காலம் ஆரம்பம்.!

Published : Jan 30, 2026, 01:30 PM IST

February Matha Rasi Palan 2026: பிப்ரவரி 2026-ல் கிரகங்களின் சஞ்சாரம் சில ராசிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர். சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன் மாற்றங்களால் சில ராசிகளுக்கு பணக்கஷ்டம், மன அழுத்தம் ஏற்படலாம். 

PREV
14
மிதுனம்

மிதுன ராசிக்கு பிப்ரவரி மாதம் சவாலானதாக இருக்கலாம். தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள நேரிடலாம். குடும்ப உறவுகளில் சிக்கல் வரலாம். வாகனப் பழுது அல்லது ஆரோக்கியத்திற்காக அதிகம் செலவாகும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக பெற்றோருடன் சண்டை, சச்சரவுகள் ஏற்படலாம். எனவே பேச்சில் நிதானம் தேவை. உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

24
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு பிப்ரவரியில் கலவையான பலன்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வராமல் போகலாம். பழைய சொத்துத் தகராறுகள் மீண்டும் வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறு உடல் உபாதைகளை கூட புறக்கணிக்கக் கூடாது. அது பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்திவிடலாம். வாழ்க்கையில் எதிர்பாராத வண்ணம் சில எதிர்மறையான முடிவுகள் ஏற்படக்கூடும். குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் கவலைக்குரிய சூழ்நிலைகள் ஏற்படலாம். எனவே பிப்ரவரி மாதம் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்து வைக்க வேண்டியது அவசியம்.

34
துலாம்

துலாம் ராசியினர் இந்த மாதம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கிரக மாற்றங்களால் கடைசி நேரத்தில் வேலைகள் நின்று போகலாம். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கை தேவை. சொத்துத் தகராறுகள் வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது போன்ற சூழல் பல விஷயங்களில் ஏற்படக்கூடும். செலவுகள் அதிகரிக்கலாம். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அது தண்ணீர் போல செலவாகக்கூடும். வங்கி இருப்பு குறையலாம். சேமிப்பு கரையலாம். பணத்தை சேமிப்பது என்பது மிகவும் கடினமான காரியமாக மாறும். எனவே நிதி சார்ந்த விஷயங்களில் துலாம் ராசிக்காரர்கள் கவனத்துடன் இருக்கவும்.

44
பரிகாரங்கள்

அசுப கிரகங்களின் தாக்கத்தில் இருந்து விடுபட, ஜோதிடர்கள் சில பரிகாரங்களை பரிந்துரைத்துள்ளனர். தினமும் குல தெய்வத்தை வணங்க வேண்டும். ஏழைகளுக்கு உணவு, உடை தானம் செய்வது நல்லது. காலை வீட்டில் பூஜை செய்த பின்னர் வீட்டை விட்டு வெளியேறுவது நல்லது. பசுக்களுக்கு வெல்லம் கலந்த அரிசி அல்லது அகத்திக்கீரை கொடுப்பது கிரகங்களால் ஏற்படும் தோஷங்களை குறைக்கும். வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பது சிறந்தது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories