Saturn Moon Transit: சந்திரன் ரிஷப ராசிக்குள் நுழைவதால், 4 ராசிகளில் சனியின் தாக்கம் காணப்படும். அந்த ராசிக்காரர்களுக்கு பண இழப்பு, மன அழுத்தம் ஏற்படக்கூடும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ஜோதிடத்தின்படி, சனி பகவான் நீதிமானாக அறியப்படுகிறார். தற்போது அவர் மீன ராசியில் உள்ளார். இந்த நிலையில் சந்திர பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். மீனத்திலிருந்து 3-ம் இடமான ரிஷபத்தை சனி பார்க்கிறார். இதனால் 4 ராசிகளுக்கு பாதிப்பு ஏற்பட இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
25
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முதல் சில சவால்கள் வரலாம். உங்கள் ராசியில் சந்திரன், அதன் மீது சனி பார்வை இருப்பதால் மன அமைதி கெடும். எண்ணங்களில் தெளிவின்மை ஏற்படும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் குழப்பம் ஏற்படும். தனிப்பட்ட வாழ்க்கையும் மட்டுமல்லாமல் தொழில் வாழ்க்கையிலும் சிக்கல்களை சந்திக்க நேரலாம். அலுவலகம் அல்லது வீட்டில் சிறிய பிரச்சனைகள் கூட பெரிதாக மாறும். அடுத்த சில நாட்களுக்கு அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
35
கடகம்
கடக ராசிக்கு இந்த நேரம் பாதிப்பை தரும். சனியின் பார்வையால் உணர்ச்சி ரீதியாக பலவீனமடைவீர்கள். குடும்பத்தில் வாக்குவாதங்கள், பண இழப்பு ஏற்படலாம். சிறிய விஷயங்களுக்கு கூட அதிக மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக குடும்பத் தகராறுகள் உங்கள் கவலைகளை அதிகரிக்கலாம். அதே சமயம் முதலீடுகளில் நஷ்டம், நிதி இழப்புகள், பண நெருக்கடிகள் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு. சிவபெருமானுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவது அசுப பலன்களை குறைக்கும்.
துலாம் ராசிக்காரர்கள் அடுத்த சில தினங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பயணங்களின் போதும், வாகனம் ஓட்டும் போதும் கவனம் தேவை. சனியின் தாக்கத்தால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். புதிய திட்டங்களை தற்போது தொடங்க வேண்டாம். ஏற்கனவே நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பது நல்லது. உங்கள் எண்ணங்களை ஆன்மீகம் நோக்கியோ அல்லது பிற வழிகளிலோ செலுத்துவது நல்லது. தொழில் விஷயங்களில் மிகவும் பொறுமை காக்க வேண்டியது அவசியம்.
55
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் செயல்திறனை பாதிக்கும். முடிவெடுக்கும் திறன் குறையும். வழக்கத்தை விட அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். கடினமாக உழைத்தும் அதற்கான பலன்கள் கிடைக்காமல் போகலாம். முடிவெடுக்க முடியாமல் தவிக்க நேரிடலாம். பனிச்சுமை அதிகரிப்பதால் பொறுமையை இழக்க நேரிடலாம். சமூகத்தில் உங்கள் நற்பெயரை குறைக்கும் விஷயங்கள் நடக்கலாம். எனவே அமைதியாக இருப்பதும், மனதை ஆன்மீகத்தில் செலுத்துவதும் நன்மை தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)