இன்று கவலைகள் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் விலகும் நாளாக இருக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றல் கிடைக்கும். நீங்கள் சாதிக்க நினைக்கும் விஷயங்களுக்கான முதல் படியை இன்று வெற்றிகரமாக எடுத்து வைப்பீர்கள்.
நிதி நிலைமை:
இன்று வரவுக்கும் செலவுக்கும் சமநிலையை பேணவேண்டிய சூழல் வரலாம். எவ்வளவு வரவு இருந்தாலும் கையில் தாங்காது. குறைந்த அளவு பணம் மீதம் இருக்கும். அதிக செலவு செய்ய நேரிடலாம். ஆரோக்கியத்திற்காக மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடக்கூடும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
இன்று வாழ்க்கைத் துணையுடன் உறவு சிறப்பாக இருக்கும். கருத்து வேறுபாடுகளை களவந்து மீண்டும் ஒன்றாக இணைவீர்கள். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கக் கூடும். பணியிடத்தில் உங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்த விஷயங்கள் தாமாக விலகும்.
பரிகாரம்:
இன்றைய தினம் மகாலட்சுமி தாயாரை வழிபடுவது இரட்டிப்பு பலன்களைத் தரும். புதன்கிழமை என்பதால் பச்சை பயிறு தானம் செய்யலாம். அம்மன் ஆலயங்களில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)