இன்று உங்களின் சொந்த முயற்சி மூலம் வெற்றிகளைக் காண்பீர்கள். நீங்கள் செய்து முடித்த வேலை அனைத்திலும் திருப்திகரமான உணர்வு ஏற்படும். உங்கள் தன்னம்பிக்கை அபரிமிதமாக வளரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உடல்நலனில் எந்த குறையும் ஏற்படாது.
நிதி நிலைமை:
இன்றைய தினம் பணவரவு அதிகரித்துக் காணப்படும். பயனுள்ள நோக்கங்களுக்காக பணத்தை செலவழிப்பீர்கள். வீடு மராமத்து, வாகனப்பழுது போன்றவற்றிற்காக பணம் செலவு செய்ய நேரிடலாம். மேலும் தங்க நகை, ஆபரணம் வாங்குவதற்காக சிறிது பணத்தை செலவிட நேரிடலாம்.
தனிப்பட்ட வாழ்க்கை:
இன்று வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணையலாம். எதிர்பாராத சந்திப்புகள் நிகழலாம். பணியிடத்தில் உங்கள் திறமைகள் பாராட்டப்படும். குறித்த நேரத்தில் பணியை முடித்து பிரகாசிப்பீர்கள். உங்கள் பணியால் மேலதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.
பரிகாரம்:
இன்று துர்க்கை அம்மன் அல்லது பராசக்தியை வழிபடுவது முழுமையான தைரியத்தையும், மன அமைதியையும் தரும். இயலாதவர்களுக்கு தயிர் சாதம் அல்லது வெள்ளை நிற இனிப்புகள் வழங்குவது சந்திரன் அருளை பெற்றுத் தரும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)