இன்று உங்கள் சுய வளர்ச்சியில் தடைகள் காணப்படும் நாளாக இருக்கும். அமைதியான அணுகுமுறை நல்லது. மன அழுத்தத்தை குறைக்க தியானம் மேற்கொள்ளலாம். தோள்பட்டை அல்லது கணுக்கால் வலி ஏற்படும். இதன் காரணமாக நாள் முழுவதும் அசௌகரியமாக உணரலாம்.
நிதி நிலைமை:
இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீடிக்கும். பண வரவு குறைந்த அளவிலேயே காணப்படும். ஆலோசனை இல்லாமல் அவசரகதியில் எடுத்த முதலீடுகளில் மூலம் பண இழப்புகள் அல்லது நிதி நெருக்கடிகள் ஏற்படலாம். பணத்தை கையாளுவதில் கவனம் தேவை.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்ப வாழ்க்கையில் இன்று மகிழ்ச்சியான நிலை காணப்படாது. அலுவலகத்தில் உள்ள பணிச்சுமையை வீட்டில் வெளிப்படுத்த நேரிடலாம். தேவையில்லாத விஷயங்களை பேசுவதை தவிர்க்கவும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காததால் கவலை அதிகரிக்கக்கூடும்.
பரிகாரம்:
புதன்கிழமை என்பதால் பசுவிற்கு பச்சைபயிறு அல்லது ஏதேனும் கீரை வகையை உணவாக அளிப்பது தடைகளை நீக்கி சுபிக்ஷத்தை வழங்கும். மகாவிஷ்ணுவை வழிபடுவது நன்மையைத் தரும். மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)