Published : Feb 28, 2025, 01:20 PM ISTUpdated : Feb 28, 2025, 01:23 PM IST
Vish Yoga 2025 Palan For Top 3 Unlucky Zodiac Signs : கும்பத்தில் சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் விஷ யோகத்தால் பண விஷயத்தில் இந்த ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் விஷ யோகத்தால் இந்த ராசியினர் பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அந்த ராசியினர் பற்றி இந்த தொகுப்பில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே வேத ஜோதிட சாஸ்திரப்படி கிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவது வழக்கம். அப்படி ராசியை மாற்றும் கிரகங்களின் தாக்கம் காரணமாக ராசிகள் சுப மற்றும் அசுப பலன்களை அனுபவிப்பார்கள். இதுவே ஒரு ராசி இன்னொரு ராசியோடு சேர்ந்து ராஜயோகத்தை உருவாக்கும். இந்த நிலையில் தான் கும்பத்தில் சனி பகவான் அஸ்தமனமாகியிருக்கிறார்.
25
சனி சந்திரன் சேர்க்கை; விஷ யோகம் பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினர்!
சனி அஸ்தமனமான கும்பத்திற்கு இப்போது சந்திரன் செல்ல இருக்கிறார். இதன் காரணமாக கும்பத்தில் சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் விஷ யோகம் உருவாகிறது. இந்த விஷ யோகம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும் பொருளாதாரம் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் இந்த ராசியினருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி விஷ யோகத்தால் பாதிக்கப்படக் கூடிய ராசியினர் யார் யார் என்று தெரிந்து கொள்வோம்.
கும்பத்தில் சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் விஷ யோகத்தால் கடக ராசியினர் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். உணவு கட்டுப்பாடு அவசியம். முக்கியமான வேலையை தள்ளி வைப்பது நன்மை அளிக்கும். வாக்கு வாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். கடைகளில் சாப்பிடுவதையும் நேரம் தவறி சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். சிவன் மற்றும் சனி பகவான் வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.
45
கன்னி ராசிக்கான விஷ யோக பலன்
கும்பத்தில் சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் விஷ யோகத்தால் கன்னி ராசியினர் கோர்ட் வழக்குகளில் பாதகமான தீர்ப்பு வரும். வண்டி, வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். உணவு கட்டுப்பாடு அவசியம். கடைகளில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். பயணங்களை தவிர்க்க வேண்டும். பண பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
55
மீன ராசிக்கான விஷ யோக பலன்
கும்பத்தில் சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் விஷ யோகத்தால் மீன ராசியினருக்கு செலவுகள் அதிகரிக்கும். புதிய வேலை தொடங்குவதை தவிர்க்க வேண்டும். பண விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பணியிடத்தில் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.