கும்பத்தில் சனி அஸ்தமனம் 2025 : சனியால் படாத கஷ்டத்த அனுபவிக்கும் டாப் 4 ராசியினர் நீங்களா?

Published : Feb 28, 2025, 08:14 AM ISTUpdated : Feb 28, 2025, 08:18 AM IST

Shani Asta in Aquarius 2025 Predictions for Top 4 Unlucky Zodiac Signs : சனி அஸ்தம் 2025: பிப்ரவரி 28, வெள்ளிக்கிழமை சனி கிரகம் அஸ்தமனமாகிறது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் வரலாம். இவர்களுக்கு பண நஷ்டம் உட்பட பல பிரச்சினைகள் வரலாம். அதைப் பற்றி முழுவதுமாக பார்த்துக் கொள்ளலாம்.

PREV
16
கும்பத்தில் சனி அஸ்தமனம் 2025 : சனியால் படாத கஷ்டத்த அனுபவிக்கும் டாப் 4 ராசியினர் நீங்களா?
கும்பத்தில் சனி அஸ்தமனம் 2025 : சனியால் படாத கஷ்டத்த அனுபவிக்கும் டாப் 4 ராசியினர் நீங்களா?

Shani Asta in Aquarius 2025 Predictions for Top 4 Unlucky Zodiac Signs : ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனி கிரகம் 2 ½ ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுகிறது. இந்த கிரகம் அவ்வப்போது வக்ரமாகவும், வக்ர நிவர்த்தியாகவும். இதே போன்று சில காலங்களில் அஸ்தமனம் (ஒரு ராசியில் மறையும்) மற்றும் உதயமாகவும் இருக்கும். தற்போது கும்ப ராசியில் உதய நிலையில் இருக்கும் சனி பகவான், பிப்ரவரி 28ஆம் தேதி இன்று சனி பகவான் கும்ப ராசியில் அஸ்தமனமாகிறது.

26
கும்பத்தில் சனி அஸ்தமனம் 2025 : சனியால் படாத கஷ்டத்த அனுபவிக்கும் டாப் 4 ராசியினர் நீங்களா?

சனியின் இந்த நிலை ஏப்ரல் 6 வரை இருக்கும். இதற்கிடையில், மார்ச் 29ஆம் தேதி சனி பெயர்ச்சி நிகழ்கிறது. அப்போது சனி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு மாறுகிறார். சுமார் 38 நாட்களுக்கு சனி அஸ்தமன நிலையில் இருப்பார். இந்த சனியின் நிலையால் 4 ராசிக்காரர்களுக்கு அதிக எதிர்மறை விளைவுகள் ஏற்படும். எந்த ராசிகள் என்று தெரிந்து கொள்ளுங்கள்..

36
ரிஷப ராசிக்கு சனி அஸ்தமனம் பலன்

ரிஷபம் ராசிக்காரங்க உஷாரா இருக்க வேண்டும். இந்த ராசிக்காரங்க வியாபாரம், வேலை என்று எல்லாத்துலயும் உஷாரா இருக்க வேண்டும். உங்களுக்கு எதிராக யாராவது சதி பண்ணும் நிலை வரலாம். யோசிக்காமல் ஏதாவது செய்தால் தப்பான விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். சனி பகவானின் கெட்ட விளைவுகளால வண்டி, வாகனத்தை கவனமாக ஓட்டு வேண்டும். இல்லையென்றால் விபத்து நடக்கலாம்.

46
சனி அஸ்தமனம் கன்னி ராசி

கன்னி ராசிக்காரங்களுக்கு நஷ்டம் வரும். இந்த ராசிக்காரங்களுக்கு சனி அஸ்தமனம் ஆவதால் பெரியளவில் நஷ்டம் வரலாம். சின்ன சின்ன சண்டைகளும் வரலாம். உஷாரா இருக்க வேண்டிய காலகட்டம். பழைய எதிரிகள சந்திக்க வேண்டியிருக்கும். பிசினஸில் கடன் வாங்க வேண்டிய நிலை வரலாம். சில விஷயங்களில் மோசமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

56
தனுசு ராசிக்கு சனி அஸ்தமனம் பலன் தமிழ்

தனுசு ராசிக்காரங்களுக்கு உடம்பு சரியில்லாமல் போகலாம். மருத்துவ செலவு அதிகரிக்கும். அதனால நீங்கள் போடும் பட்ஜெட் தப்பாக போகலாம். உங்க பார்ட்னர்கூட உங்களது உறவில் ஏற்ற தாழ்வுகள் வரலாம். தூக்கம் இல்லாமல் போறது இல்லன்னா பிளட் பிரஷர் பிரச்சனை வரலாம். யாரையும் நம்பி பணம் கடனாக கொடுக்க கூடாது.  அதே போன்று தான் எந்த பொருளையும் கடனாக கொடுக்க கூடாது.

66
சனி அஸ்தமனம் மீன ராசிக்கான பலன்

மீன ராசிக்காரங்களுக்கு பிரச்சனை அதிகமாகும். சிலர் உங்களை ஏமாற்றலாம். எதிலும் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஏதாவது மன வருத்தமான சம்பவம் உங்களது குடும்பத்தில் கெட்ட விளைவுகளை ஏற்படுத்தலாம். பெண்கள் வண்டி வாகனங்களில் செல்லும் போது பார்த்து கவனமாக செல்ல வேண்டும். உங்களது வாழ்க்கையில மனசு கஷ்டப்படுற மாதிரி ஏதாவது நடக்கும். 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories