சனி வக்ர பெயர்ச்சி 2024 : யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? யாருக்கு அமோக காலம்?

First Published | Jan 30, 2024, 9:06 AM IST

சனி வக்ர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மைகள் ஏற்படும் மற்றும் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

சனி பகவான் மட்டும் தான் 9 கிரகங்களில் நீதிபதி என்று அழைக்கபப்டும் ஒரே கிரகம் ஒருவர் செய்யும் நற்செயல்களுக்கு ஏற்ப அவருக்கு நற்பலன்களையும், தீமையையும் சனி பகவான் வழங்குகிறார். எனவே ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது.

எனவே சனிப் பெயர்ச்சி தனது இயக்கத்தை மாற்றும் போது அது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.  தற்போது கும்ப ராசியில் சனி பகவான் ஜூலை முதல் வக்ர கதியில் பயணம் செய்யப்போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மைகள் ஏற்படும் மற்றும் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

Tap to resize

Image: Pexels

துலாம் :

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி பகவான் வக்ரமடைவதால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும். வேலை செய்யும் இடத்தில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுய தொழில் செய்வர்களும் நல்ல லாபட்த்ஹை எதிர்பார்க்கலாம். உறவினர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். உல்லாச பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். மன நிம்மதியும் இந்த காலக்கட்டத்தில் அதிகரிக்கும்.

விருச்சிகம் :

ஜூன் மாதம் நடைபெற உள்ள சனி வக்ர பெயர்ச்சியால் உங்கள் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி மனநிம்மதி ஏற்படும். கடனாக கொடுத்த பணம் வராது என்று நினைத்த நிலையில் உங்களுக்கு வந்து சேரும். கணவன் – மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். இதுவரை தடைபட்டு வந்த சுபகாரியங்கள் இனிதே நடைபெறும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். படிப்பு, வேலைக்காக சிலர் வெளிநாடுகளுக்கு செல்லும் யோகம் ஏற்படும். காதல் விவகாரங்களால் மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படும்.

Sagittarius

தனுசு :

ஏழரை சனி முடிந்துவிட்டாலும் இன்னும் சில பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். கடனை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்தவர்கள் வீடு தேடி வந்து பணத்தை கொடுக்கும் சூழல் உருவாகும். எதிர்பாராத பண வரவு இருக்கும். ஆனால் அதே நேரம், புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல் உழைப்பு அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கும் இது கொஞ்சம் சிக்கலான காலம் தான். வார்த்தைகளில் நிதானமும் கவனமும் தேவை.

horoscope today Capricorn

மகரம் :

ஏழரை சனியில் பாத சனி நடைபெறுவதால் உடல் நலனில் சற்று பாதிப்பு இருந்திருக்கும். ஆனால் ஜூலை முதல் நவம்பர வரையிலான காலக்கட்டத்தில் இந்த பாதிப்புகள் சற்றே குறைய வாய்ப்புள்ளது.  எனினும் தொழிலில் புதிய முயற்சிகளை தவிர்க்கவும். தேவையற்ற முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்கள் பிரச்சனைகள் நீங்கள் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். உங்கள் விஷயத்திலும் மூன்றாம் நபர் தலையிட விட வேண்டாம். பணியிடத்தில் சிறிய பிரச்சனைகள் உருவாகும். அவசரப்பட்டு வேலையை விட்டுவிட வேண்டாம். தாயின் உடல்நலனில் அக்கறை அவசியம்..

Daily Aquarius Horoscope

கும்பம் :

உங்கள் ராசிக்கு தற்போது ஜென்ம சனி காலம் நடக்கிறது. பல நெருக்கடிகளை கடந்து வந்திருப்பீர்கள். ஆனால் தற்போது புதிய சொத்துக்கள் வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். பெண்கள் ஆடை ஆபரணங்களை சேர்த்து மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு நல்ல கல்லூரிகல், பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பு கிடைக்கும். திருமணம் தடைபட்டு வந்தவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் கைகூடும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து வந்த மன கசப்புகள் நீங்கும்.

மீனம் :

இது உங்களுக்கு ஏழரை சனிகாலம். ஆனாலும் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். உங்கள் மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். பணவரவு அதிகரித்தாலும், அவ்வப்போது செலவுகளும் ஏற்படும். அரசு வழியில் சில நன்மைகள் கிடைக்கும். வீண் விரைய செலவுகளை குறைத்து சுப செலவுகளாக மாற்றிக்கொள்ளுங்கள். நீண்ட நாட்களாக திருமணம் தடைபட்டு வந்தவர்களுக்கு திருமணம் கைக்கூடும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் நல்லதே நடக்கும்.

Latest Videos

click me!