சனி தரும் ராஜயோகம் – புதிய வேலை, பிஸினஸ் எல்லாம் ஆஹா ஓஹோனு இருக்குமா? தலைகீழா மாறும் வாழ்க்கை!

Published : Nov 02, 2024, 11:28 AM ISTUpdated : Nov 02, 2024, 12:16 PM IST

Sani Vakra Nivarthi 2024 Palan in Tamil: நவம்பர் 15ஆம் தேதி கும்ப ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் சச ராஜயோகம் உருவாகிறது. சனி சச ராஜயோகம் 5 ராசிக்கார்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்க போகிறது. அதைப் பற்றி முழுமையாக பார்க்கலாம்.

PREV
17
சனி தரும் ராஜயோகம் – புதிய வேலை, பிஸினஸ் எல்லாம் ஆஹா ஓஹோனு இருக்குமா? தலைகீழா மாறும் வாழ்க்கை!
Sani Vakra Nivarthi 2024 Palan in Tamil, Sani Transit Palan in Tamil

Sani Vakra Nivarthi 2024 Palan in Tamil: தீபாவளி முடிந்த நிலையில் சனி பகவானின் வக்ர நிவர்த்தி நடைபெற இருக்கிறது. வரும் நவம்பர் 15ஆம் தேதி கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான் சச ராஜயோகத்தை உருவாக்கப் போகிறார். சனியின் சச ராஜயோகம் இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் முழுமையாக பார்க்கலாம்.

27
Saturn Transit Palan in Tamil, Sani Vakra Nivarthi 2024 Palan in Tamil

தீபாவளிக்கு பிறகு சனி தரும் ராஜ யோகம்:

ஜோதிடத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ராசிகளில் சனி பகவான் முதன்மையான கிரகம். மந்த காரகன் என்றும் அழைப்பார்கள். ஒரு ராசியில் இரண்டரை, இரண்டரை ஆண்டுகள் தங்கியிருந்து மொத்தம் ஏழரை ஆண்டுகள் ஒரு ராசிக்கு பாதிப்பை ஏற்படுத்துவார். இதில் சனி வக்ர பெயர்ச்சி மற்றும் வக்ர நிவர்த்தி பெயர்ச்சியும் உண்டு.

தற்போது வக்ரத்தில் இருக்கும் சனி பகவான் வரும் நவம்பர் 15 ஆம் தேதி இரவு 7.51 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதன் காரணமாக சனி சச ராஜயோகம் உருவாகும். அப்படி உருவாகும் ராஜயோகம் இந்த 5 ராசியினருக்கு என்ன மாதியான பலன்களை கொடுக்கும் என்று பார்க்கலாம் வாங்க…

37
Astrology, Zodiac Sign, Sani Vakra Nivarthi 2024 Palan in Tamil

மேஷம் ராசிக்கான சனி வக்ர நிவர்த்தி ராஜயோக பலன்:

மேஷ ராசிக்கான சனி வக்ர நிவர்த்தி பலன் யோகமான பலனை தரும். சனி நேரடியாக இருப்பதால் பெரியளவில் மாற்றம் இல்லை என்றாலும் கூட நிதி பிரச்சனை சரியாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.

47
Sani Peyarchi Palan in Tamil, Sani Vakra Nivarthi 2024 Palan in Tamil

ரிஷபம் ராசிக்கு சனி வக்ர நிவர்த்தி ராஜயோகம்:

ரிஷப ராசிக்கு சனி வக்ர நிவர்த்தி ராஜயோகத்தை தரும். இரும்பு தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். இதுவரையில் தொழில் இருந்த மந்த நிலை மாறும். வியாபாரத்தில் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்வீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

57
Horoscope, Sani Vakra Nivarthi 2024 Palan in Tamil

தனுசு ராசிக்கு சனி வக்ர நிவர்த்தி ராஜயோகம்:

தனுசு ராசிக்கு இது பொற்காலம். மனதில் இருந்து வந்த கவலை நீங்கி நிம்மதி கிடைக்கும். புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள். நீதிமன்ற வழக்கு இருந்தால் அதற்கான முடிவு கிடைக்கும். நோய் பிரச்சனை தீரும். எல்லா சாதகமாக முடியும்.

67
Saturn Transit, Sani Vakra Nivarthi 2024 Palan in Tamil

மகரம் ராசிக்கு சனி வக்ர நிவர்த்தி ராஜயோகம்:

சனியின் இந்த வக்ர நிவர்த்தி மகர ராசிக்கு சாதகமான பலனை தரும். இதுவரையில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும். வீடு மாறுவீர்கள். புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உண்டாகும். பொருளாதார பிரச்சனை சீராகும்.

77
Sani Vakra Nivarthi 2024 Palan in Tamil, Astrology, Jothidam,

கும்பம் ராசிக்கான சனி வக்ர நிவர்த்தி ராஜயோகம்:

அதிபதியே சனி பகவான். அப்படி இருக்கும் போது கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான் நல்ல பலனை கொடுக்காமலா விட்டுருவாரு. கவலைப்படாதீங்க இனி எல்லாமே நல்ல காலம் தான். பிஸினஸ் செய்வதற்கு ஏற்ற காலம். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு வரும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories