Sani Sasa Rajayoga Palan Tamil, Saturn Sasa Rajayoga Palan Tamil
Sani Sasa Rajayoga Palan Tamil : சாஸ்திரத்தின்படி, சனி பகவானின் சக்தி மகிமை வாய்ந்தது. கிரகங்களில் நீதிபதியாக சனி பகவான் இருக்கிறார். நல்லது செய்பவர்களுக்கு நல்லது மட்டுமே செய்யக் கூடியவர் சனி பகவான். ஆனால், கெடுதல் செய்பவர்களை சும்மாவே விடமாட்டார். சனியின் பல்வேறு தசைகளில் சில ராசிகள் உள்ளன. அதனால் சில நேரங்களில் மிகவும் கஷ்டமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மீண்டும் சனியின் பார்வையால் வாழ்க்கையில் சுப நேரம் வரும். சனி பகவான் அடுத்த ஆண்டு நல்ல நேரத்தை கொண்டு வர உள்ளார்.
Saturn Transit 2025 Palan Tamil, Sani Sasa Rajayoga Palan Tamil
30 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் சஷ ராஜயோகம் உருவாகும். இந்த யோகம் உருவாகும் அதே வேளையில் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம் திரும்பும். மார்ச் 28ஆம் தேதி சனிக்கு மிகவும் முக்கியமானது. 2025 வரை சனி தனது சொந்த ராசியில் கும்ப ராசியில் சனி இருப்பார். இதனால் சஷ ராஜ யோகம் உருவாகும். இதன் விளைவாக இந்த மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம் திறக்கும்.
Horoscope, Sani Sasa Rajayoga Palan Tamil, Capricorn Zodiac Signs
மகர ராசிக்கு சனி சஷ ராஜயோகம் பலன்:
மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் திறக்கும். இந்த நேரத்தில் சஷ மகாபுருஷ ராஜயோகம் உருவாகிறது. பரஸ்பர உறவு நன்றாக இருக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும், அதேபோல் வேலையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வும் கிடைக்கும். இந்த நேரத்தில் மாணவர்களின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். தேர்வில் எளிதில் வெற்றி பெறுவார்கள். எல்லாமே நல்லதாகவே நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும்.
Saturn Transit 2025 Palan Tamil, Gemini Zodiac Signs
மிதுன ராசிக்கு சனி சஷ ராஜயோக பலன்:
2025 ஆம் ஆண்டில் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் திறக்க உள்ளது. நிதி முன்னேற்றம் ஏற்படும். அதேபோல் சமூகத்தில் மதிப்பு, மரியாதையும் அதிகரிக்கும். இந்த நேரத்தில் அனைத்து உழைப்புகளுக்கும் பலன் கிடைக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். அதேபோல் குடும்பத்தில் மனைவியின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். இந்த காலகட்டம் வாழ்க்கைக்கு தேவையான எல்லா வசதிகளும் பெருகும். முன்னேற்ற பாதையை நோக்கி முன்னேறி செல்வீர்கள்.
Sani Sasa Yoga Palan Tamil, Astrology, Zodiac Signs, Aquarius Zodiac,
கும்ப ராசிக்கு சனி சஷ ராஜயோக பலன்:
கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்கும். இந்த நேரத்தில் சனி பகவானின் ஆசீர்வாதம் உங்கள் மீது இருக்கும். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவீர்கள். புதிதாக ஏதாவது தொடங்க திட்டம் இருந்தால் அதைச் செய்யலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அமோகமான காலகட்டம்.