ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஒன் லைனில் 12 ராசிகளுக்கான டிசம்பர் மாத ராசி பலன்!

First Published | Dec 1, 2024, 10:19 AM IST

December 2024 Matha Rasi Palan Tamil : 2024 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் எந்தெந்த ராசியினருக்கு என்ன பலன் என்று பார்க்கலாம் வாங்க…

Mesham To Meenam December 2024 Month Rasi Palan

December 2024 Matha Rasi Palan Tamil : டிசம்பர் 2024 மாத ராசிபலன்: 2024ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தின் 31 நாட்கௌம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த மாதம் பல அற்புதங்களை கொண்டு வந்து தரப் போகிறது. ஐயப்பன் மற்றும் முருகனுக்கு மாலை அணிந்து பக்தர்கள் சபரிமலைக்கும், ஆறுபடைக்கும் செல்வது வழக்கம். இந்த மாதத்தில் சில கிரகங்கள் தங்களது ராசிகளை மாற்றும். இந்த ராசி மாற்றம் 12 ராசியினருக்கும் எந்த மாதிரியான பலன்களை தரும் என்பது குறித்து பார்க்கலாம்…

December 2024 Month Rasi Palan

மேஷ ராசி பலன் டிசம்பர் 2024:

மேஷ ராசியினருக்கு காதல் வாழ்க்கையில் சாதகமான பலன்கள் நடக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெறும். மகன் அல்லது மகளுக்கு திருமணம் நடைபெறும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். ஒரு சிலருக்கு மன அழுத்தம் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வருவதற்கான அறிகுறிகள் ஏற்படும். பொருளாதாரத்தில் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. கவனமாக இருக்க வேண்டும்.

Latest Videos


December 2024 Matha Rasi Palan Tamil

கடகம் ராசி பலன் டிசம்பர் 2024

அதிர்ஷ்டமான மாதமாக உங்களுக்கு இருக்கும். வியாபாரத்தில் நன்மைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். திடீர் செலவு ஏற்படக் கூடும். புதிய வேலை கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் ரீதியாக டிராவல் செய்யும் நிலை வரலாம்.

Horoscope, Zodiac Sign, Astrology

துலாம் ராசி பலன் டிசம்பர் 2024

உங்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். அவர்கள் மூலமாக நிதி கிடைக்க பெறுவீர்கள். மனைவிக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உண்டாகும். கோர்ட் வழக்கு உங்களுக்கு சாதகமான வெற்றியை தரும். தொழில், வியாபாரம் நன்றாக இருக்கும்.

2024 December Month Rasi Palan

சிம்ம ராசி டிசம்பர் 2024:

வருமானம் அதிகரிக்கும். புதிய வேலை மூலமாக வருமானம் கிடைக்க பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய மாதம். அலுவலகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க பெறுவீர்கள். முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நன்மை அளிக்கும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க கூடாது. கடன் வாங்கும் சூழல் வரும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.

December Month Rasi Palan 2024

மிதுனம் ராசி பலன் டிசம்பர் 2024

சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் ஒரு மாதமாக உங்களுக்கு அமையும். நிச்சயதார்த்தம், திருமணம் என்று குடும்பத்தில் குதூகலம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். அலுவலகத்தில் பொறுமை அவசியம். எதையும் அவசரப்பட்டு செய்ய கூடாது.

December Rasi Palan Tamil, Horoscope

கன்னி ராசி டிசம்பர் 2024:

வேலை ரீதியான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உறவினர்களின் சண்டைகள் முடிவுக்கு வரும். புதிய வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் வீட்டில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். ஆனமீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளால் நல்ல் செய்திகள் வந்து சேரும்.

Horoscope, Zodiac Signs, Sagittarius December Palan

தனுசு ராசி டிசம்பர் 2024:

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய மாதம். அரசியல் ஆதாயம் ஏற்படக் கூடும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் சில பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். பொறுமையாக இருப்பது அவசியம். குடும்பத்தில் நிலம் தொடர்பான சண்டைகள் வரலாம்.

12 Rasi December Palan, Rasi Palan, Astrology

ரிஷபம் ராசி பலன் டிசம்பர் 2024:

சொத்து பிரச்சனைகள் சரியாகும். தொழில், வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்கிடையில் சண்டை சச்சரவுகள் ஏற்படக் கூடும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொலை தூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும்.

Capricorn December Rasi Palan Tamil

மகர ராசி பலன் டிசம்பர் 2024

வெளியூர் செல்லும் வாய்ப்பு வரலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நன்மை அளிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான மாதமாக இருக்கும். புதிய நபரின் மூலம் ஆதாயம் உண்டாகும். சொத்து, நிலம் ஆகியவற்றில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

December 2024 Matha Rasi Palan Tamil

விருச்சிகம் ராசி டிசம்பர் 2024:

காதல் வாழ்க்கைக்கு ஏற்ற மாதமாக இருக்கும். காதலில் புதிய அனுபவம் இருக்கும். துணை உடனான உறவை மேலும் வலுப்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உடல் நல பாதிப்பு ஏற்படக் கூடும். வேலை மாற்றம் செய்வதற்கான வாய்ப்புகள் வரலாம். குழந்தைகளைப் பற்றி கவலைப்படுவீர்கள்.

Meenam December Rasi Palan Tamil, Astrolory, Pisces December Month Palan

மீன ராசி பலன் டிசம்பர் 2024:

கோர்ட் கேஸ் இருந்தால் உங்களுக்கு சாதகமான பலன் வரலாம். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல உறவுகள் தேடி வரும். அலுவலகத்தில் உற்சாகம் அதிகரிக்கும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு தேவை. முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

December Month Rasi Palan

கும்ப ராசி பலன் டிசம்பர் 2024:

பண இழப்பு ஏற்படக் கூடும். மருத்துவ செலவுகள் அதிகரிக்க கூடும். அலுவலகத்தில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். கடன் வாங்கும் சூழல் ஏற்படும். மனைவி உங்களை ஆச்சரியப்படுத்துவார். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

click me!