சனியின் அசுப சேர்க்கை: இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு யோகம், சம்பள உயர்வு கிடைக்கும்; யார் அந்த லக்கிமேன்?

First Published | Oct 29, 2024, 8:12 AM IST

Sani Rajayoga Palan in Tamil: அக்டோபர் 28 முதல் நவம்பர் 7 வரை 5 கிரகங்கள் சில ராசிகளுக்கு சாதகமாக இருக்கும். மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி நிலவும். அதைப் பற்றி பார்க்கலாம் வாங்க…

Astrology, Horoscope, Saturn Yoga Palan in Tamil

Sani Rajayoga Palan in Tamil: அக்டோபர் 28ஆம் தேதி நேற்று இரவு முதல் நவம்பர் 7ஆம் தேதி இரவு வரை 5 கிரகங்கள் சில ராசிகளுக்கு சாதகமாக இருப்பது அபூர்வ அம்சமாகும். இதனால் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்...

Mesham, Saturn Rajayoga Palan in Tamil

மேஷ ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும்:

மேஷ ராசிக்காரர்களுக்கு வியாழன், சனி, கேது, புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால், இவர்களுக்கு பணம் வரவு அதிகமாகவே இருக்கும். சிறிய முயற்சிக்கு கூட பல மடங்கு பலன் கிடைக்கும். வராமல் இருந்த பணம் கூட வீடு தேடி வரும். அலுவலகத்தில் பதவி உயர்வு, சமபள உயர்வு கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு யோகம் தேடி வரும். புதிய ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள்.

Tap to resize

Rishabam Saturn Rajayoga Palan in Tamil

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு, செவ்வாய், சூரியன், சுக்கிரன், கேது சாதகமாக இருப்பதால் வருமானம் அதிகரிக்கும். ராஜபோக வாழ்க்கை உண்டாகும். புதிய ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். ஊதிய உயர்வு கிடைக்கும். சில நேரங்களில் பதவி உயர்வு கூட தேடி வரும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சொத்து தகராறு இருந்தால் தீரும்.

Kadagam, Saturn Rajayoga Palan in Tamil

கடக ராசிக்காரர்களின் பிரச்சனைகள் தீரும்:

கடகத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன், வியாழன் இணைவதால் 8ஆவது இடத்து சனியின் பிரச்சனைகளும் நீங்கும். வருமானம் கூடும். வேலையில் அடுத்தடுத்து முன்னேற்றம் உண்டாகும். சொந்தமாக பிஸினஸ் செய்பவர்களுக்கு தொழில், வியாபாரம் விரிவடையும். சொத்து கைக்கு வந்து சேரும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு வந்து சேரும்.

Horoscope, zodiac Sign, Kanni Saturn Rajayoga Palan in Tamil

கன்னி ராசிக்காரர்களுக்கு வருமானம் கூடும்:

கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன், வியாழன் சேர்க்கையால் வருமானம் கூடும். அலுவலகத்தில் சம்பள உயர்வு கிடைக்கும். பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். சொந்தமாக பிஸினஸ் செய்பவர்களுக்கு தொழில், வியாபாரத்தில் அமோகமாக இருக்கும்.

Viruchigam Saturn Rajayoga Palan in Tamil

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கோர்ட், கேஸ்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு, செவ்வாய், புதன், வியாழன், சூரியன், கேது ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் வருமானம் பல மடங்கு உயரும். வருமானத்திற்காக நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சியும் வெற்றி அடையும். மற்றவர்களிடம் கொடுத்துவிட்டு திரும்ப வராத பணம் கூட கைக்கு வந்து சேரும். கோர்ட், கேஸ் இருந்தால் கூட இந்த 5 கிரக சேர்க்கையின் பலனால் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.

Magaram Saturn Rajayoga Palan in Tamil

மகர ராசிக்காரர்களுக்கும் பொருளாதார பிரச்சனை தீரும்:

மகர ராசியின் அதிபதி சனி, வியாழன், புதன், சூரியன், சுக்கிரன் ஆகியோரும் அனுகூலமான பலன்களைத் தருவார்கள். வருமானத்திற்காக நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சியும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுடைய எல்லா தேவையும் நிறைவேறும் மாதம் இது. புதிதாக ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு பிஸினஸ் அமோகமாக இருக்கும். லாபம் பல மடங்கு அதிகரிக்கும்.

Latest Videos

click me!