
விருச்சிக ராசிக்காரர்களுக்கான 2025 ஆம் ஆண்டு ராசி பலன்:
Viruchigam New Year Rasi Palan 2025 in Tamil: 2025 ஆம் ஆண்டில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு மற்றும் கேது பெயர்ச்சி என்று முக்கியமான கிரகங்களின் பெயர்ச்சிகள் நிகழ போகிறது. இந்தப் பதிவில் கொடுக்கப்படும் பலன்கள் எல்லாம் பொதுவான பலன்கள் தான். அவரவர் ஜாதகத்தில் கிரக நிலைகள் இருக்கும் இடங்களைப் பொறுத்தும் முன் ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையிலும் விருச்சிக ராயினருக்கு 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு பலன் இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு இந்த பதிவை படியுங்கள்.
இதற்கு முன் உங்களது வாழ்க்கையில் நடந்த பலன்களையும் இந்த பதிவில் கொடுக்கப்பட்ட பலன்களையும் நீங்கள் ஒப்பிட்டு பார்க்கலாம். இந்தப் பதிவில் விருச்சிக ராசியினருக்கு ஆரோக்கியம், கல்வி, பட்ஜெட், காதல், திருமணம், குடும்பம் வண்டி, வாகன யோகம், பரிகாரங்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க…
உங்களது வீட்டில் மனைவியோ, கணவனோ அல்லது வேறு யாரேனும் தனுசு ராசியா இருந்தால் அவர்களுக்கான பலன்: தனுசு ராசிக்கான 2025 புத்தாண்டு பலன் – ஒரு காலத்துல ஓஹோனு வாழ்ந்த ராசி - வேலை போகுமா? சம்பளம் கூடுமா?
தொழில்:
சாதகமான பலனும், சாதமற்ற பலனும் நடக்கும். அதாவது கலவையான பலன்களை மாறி மாறி அனுபவிக்கும் நிலை உருவாகும். சனியின் பார்வை பலனானது உங்களது 6ஆம் வீட்டின் மீது விழுவதால் வேலையில் சில அதிருப்தி உண்டாகும். இது மார்ச் மாதம் வரையில் இருக்கும். அதன் பிறகூ சனியின் பார்வை மாறுவதால் வேலையில் எந்த பிரச்சனையும் வராது. மேலும், வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.
2025 ஆம் ஆண்டின் தொடக்க முதல் மே மாதம் வரையில் குரு விருச்சிக ராசிக்கு 7ஆவது வீட்டில் இருப்பார். அதன் பிறகு 8ஆவது வீட்டிற்கு பெயர்ச்சியாவார். இந்த 7ஆவது வீட்டு குரு பார்வை உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். அதன் பிறகு ராகு, கேது பெயர்ச்சிகள் சாதகமற்ற இடங்களில் பெயர்ச்சி ஆவதால், தொழிலில் மந்த நிலை ஏற்படும். தொழில் சார்ந்து மற்றவர்களின் ஆலோசனைகளை எதிர்பார்க்க நேரிடும். அவர்களது ஆலோசனைப்படி செயல்பட்டால் நல்லதே நடக்கும்.
கல்வி:
கல்வியில் பலவீனமாகவே இருப்பீர்கள். படிப்பில் ஆர்வமின்மை ஏற்படும். கவனம் செலுத்த முடியாது. தொடர்ந்து கடினமாக முயற்சி செய்தால் பாடத்தில் கவனம் செலுத்தலாம். நல்ல பலனையும் எதிர்பார்க்கலாம். ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.
பட்ஜெட்:
விருச்சிக ராசியை சேர்ந்த அன்பர்களுக்கு 2025 ஆம் ஆண்டை பொறுத்த வரையில் பொருளாதாரத்தில் குருவின் அருளால் மே மாதம் வரையில் நல்ல வருமானம் இருக்கும். சேமிப்பு உயரும். ஆனால், அதன் பிறகு வருமானத்தில் தொய்வு ஏற்படும். பட்ஜெட் டைட்டாக இருக்கும். வருமானம் வரும் போது சேமித்து வைத்தால் ஆண்டின் பிற்பகுதியில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், வரவில் சிக்கல் இருந்து கொண்டே இருக்கும்.
திருமணம்:
2025 ஆங்கில புத்தாண்டை பொறுத்த வரையில் விருச்சிக ராசியினருக்கு குருவின் அருளால் திருமணம் நடக்கும். அதுவும் மே மாதத்திற்குள்ளாக அதற்குரிய பேச்சுவார்த்தையில் இருந்தால் நடக்கும். அதன் பிறகு குரு சாதகமற்ற நிலைக்கு செல்வதால், சிக்கல் ஏற்படும். திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கும். 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். ஜாலியாக அனுபவிக்கலாம். அதன் பிறகு அடிக்கடி கணவன் மனைவி சண்டை, மற்ற பிரச்சனைகள் என்று திருமண வாழ்க்கையில் சிக்கல் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையில் விட்டுக் கொடுத்து சென்றால் பிரச்சனை வராது.
காதல்:
2025 ஆம் ஆண்டு விருச்சிக ராசியினர் உண்மையாக ஒருவரை காதலித்தால் சனி பகவானே உங்களை சேர்த்து வைப்பார். இதுவே உங்களது காதல் மாறிக் கொண்டே இருந்தால் உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல் ஏற்படும். இதுவே கள்ள உறவு தொடர்பான காதலாக இருந்தால் நடுத்தெருவுக்கு வரும் நிலை கூட உருவாகும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
உங்களது குடும்பத்தில் யாரேனும் தனுசு ராசியா இருந்தால் இதையும் படியுங்கள்: தனுசு ராசிக்கான 2025 புத்தாண்டு பலன் – ஒரு காலத்துல ஓஹோனு வாழ்ந்த ராசி - வேலை போகுமா? சம்பளம் கூடுமா?
குடும்பம்:
சனி, குரு, ராகு மற்றும் கேது பெயர்ச்சிகளின் காரணமாக 2025 ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்காரங்க கலவையான பலன்களை பெறுவீர்கள். முதல் பகுதி சிறப்பானதாக இருந்தாலும் வருடத்தின் நடுப்பகுதியில் சில ஏற்றத்தாழ்வுகள் உண்டாகும். இல்லற வாழ்க்கையில் சிறப்பான பலன்களைப் பெறலாம். குடும்பத்தில் பழைய பிரச்சனைகள் இருந்தால் அது முற்றிலும் கண்ணுக்கு தெரியாமல் மறைந்துவிடும். ஆண்டின் இறுதியில் சாதகமான பலன்களை பெறுவீர்கள்.
நிலம், வீடு, வண்டி, வாகனம் வாங்கும் யோகம்:
2025 ஆம் ஆண்டு விருச்சிக ராசியினருக்கு நிலம், வீடு, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வாங்கி, விற்கும் தொழில் செய்பவர்களுக்கு நல்ல காலம் தான். எனினும், மே மாதத்திற்கு பிறகு ராகுவின் பெயர்ச்சி பலன் தாக்கத்தை ஏற்படுத்தும். சின்ன சின்ன இடையூறுகள் ஏற்படும். வண்டி வாங்கும் போது எந்த வாகனம் வாங்க போகிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு வாகனம் வாங்க ஏற்ற வருடம் தான். உங்களது விருப்பம் இந்த ஆண்டு நிறைவேறும்.
உடல் ஆரோக்கியம்:
விருச்சிக ராசிக்காரர்களைப் பொறுத்த வரையில் 2025 ஆம் ஆண்டு ஓரளவு நல்ல பலன்களைத் தான் கொடுக்கும். முதல் 3 மாதங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மார்பு தொடர்பான பிரச்சனை, இடுப்பு, மூளை, தலைவலி, முழங்கால் பிரச்சனை இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஒரு சில நோய் பிரச்சனைகள் சரியானாலும், புதிதாக உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்படும். இந்த ஆண்டில் நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
பரிகாரங்கள்:
2025 ஆம் ஆண்டு விருச்சிக ராசியினர் ஆஹா, ஓஹோன்னு வாழ்க்கை இல்லாவிட்டாலும் ஓரளவு கலவையான பலன்களை எதிர்பார்க்கலாம். கெடு பலன்களை தவிர்த்து முற்றிலும் நல்ல பலன்களை அனுபவிக்க இந்த பாரிகாரங்களை செய்து கொள்ளலாம்.
மாதத்திற்கு ஒரு முறை குல தெய்வ கோயிலுக்கு சென்று வருவது நல்ல பலனை அளிக்கும்.
உடலில் வெள்ளி நகைகளை அணிந்து கொள்ள வேண்டும். எப்போது உங்களது உடலில் வெள்ளி நகைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் பாதுகாப்பும் முக்கியம்.
சனிக்கிழமை தோறும் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயரை வழிபட்டு வர நல்ல பலனை அனுபவிக்கலாம்.
திங்கள் கிழமை தோறும் சிவனுக்கு அபிஷேகத்திற்கு இளநீர் வாங்கி கொடுக்கலாம்.