Sani Peyarchi 2026: சனியின் பிடியில் இருந்து விடுதலை.! பிப்ரவரி 5 முதல் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகும் 5 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?

Published : Feb 04, 2026, 11:49 AM IST

30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி பகவான் மீன ராசியில் உதயமாகிறார். மீன ராசியின் அதிபதி கிரகம் குரு. சனி-குரு சேர்க்கையின் தாக்கத்தால், மூன்று ராசிக்காரர்களின் வாழ்வில் பொற்காலம் தொடங்கும். அந்த ராசிகள் குறித்து பார்க்கலாம். 

PREV
16
சனி பெயர்ச்சி 2026

2026 ஆம் ஆண்டு நிகழவிருக்கும் முக்கியமான ஜோதிட நிகழ்வுகளில் ஒன்று சனி பகவானின் உதயம். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் தனது நட்பு கிரகமான குருவின் வீடான மீன ராசியில் உதயமாகிறார். மீனம் என்பது நீர் மற்றும் மோட்ச ராசியாகும். இங்கு சனி பகவான் அமரும்பொழுது ஆன்மீக தேடல் அதிகரிக்கும். ஆடம்பரத்தை விட நிதானத்திற்கும், சேமிப்பிற்கும் மக்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். தர்ம சிந்தனைகள் மேலோங்கும். சனி பகவானின் உதயத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

26
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் லாப ஸதானமான பதினோராம் வீட்டில் உதயமாக இருக்கிறார். எனவே ரிஷப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும். நீண்ட நாட்கள் வராமல் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது பொற்காலமாக அமையும். வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல விரும்புவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் அதிக லாபம் கிடைக்கும்.

36
மிதுனம்

மிதுன ராசியின் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் உதயமாகிறார். இதன் காரணமாக வேலையில் எதிர்பாராத முன்னேற்றங்கள் ஏற்படும். வேலையிலிருந்து அழுத்தங்கள் தடைகள் நீங்கும். வேலையில்லாதவர்களுக்கு கைநிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு தேடி வரும். சமூகத்தில் உங்கள் கௌரவம் அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கவில்லையே என ஏங்கி வந்தவர்கள் உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள்.

46
கன்னி

கன்னி ராசியின் ஏழாம் இடத்திற்கு சனி பகவான் வந்தாலும் சமசப்தம பார்வையாக ராசியை பார்ப்பதால் அதிக நன்மைகள் கிடைக்கும். கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். தொழிலுக்கு தேவையான இயந்திரங்கள் அல்லது வாகனங்களை வாங்குவீர்கள். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும்.

56
விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு சனி பகவான் ஐந்தாம் வீட்டிற்கு நகர்கிறார். இதன் காரணமாக அர்த்தாஷ்டம சனி காலத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். இது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால் உங்கள் பிள்ளைகளால் பெருமை சேரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் சரியாகி சொத்துக்கள் கைக்கு வரும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக நடந்து பணம் கைக்கு கிடைக்கலாம். பங்குச்சந்தை மற்றும் நீண்டகால முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். அதிக பணம் வரவால் நிலம், தங்கம் போன்ற திட்டங்களில் முதலீடுகளைத் தொடங்குவீர்கள்.

66
தனுசு

தனுசு ராசிக்கு சனி பகவான் நான்காம் வீட்டில் உச்சம் பெறுகிறார். இது சுக ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக பொன், பொருள், வசதிகள் அதிகரிக்கும். வீடு வாகனம் போன்ற சொத்துக்களை வாங்க நல்ல நேரமாக இருக்கும். ரியல் எஸ்டேட் போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கு லாபகரமான சூழல்கள் ஏற்படும். ஆடம்பர வாழ்க்கை அமையும். கடந்த கால மன உளைச்சல்கள் நீங்கி, குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories