கன்னி ராசிக்கு சனி பகவான் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார். ஆறாம் வீடு சத்ரு, ரோக ஸ்தானம் ஆகும். பொதுவாக சனி பகவான் 3, 6, 11 ஆகிய இடங்களில் அமரும் பொழுது அது அந்த ராசியினருக்கு அசுர வளர்ச்சியைத் தரும் என்பது விதியாகும். ஆறாம் வீட்டில் சனி பகவான் அமர்வால் உங்கள் எதிரிகளை வீழ்த்தும் வல்லமையைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக உங்களை தொந்தரவு செய்து வந்த கடன் பிரச்சனைகள் நீங்கும். உங்களை வாட்டி வதைத்து வந்த உடல்நலக் கோளாறுகள் நீங்கி, மனநிம்மதி பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.