2026 Rasi Palan in Tamil: 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், அதனால் பலன்பெறும் ராசிகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
பிறக்க இருக்கும் புத்தாண்டு ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக இருக்கிறது. ஜனவரி மாதத்தில் 5 பெரிய கிரகங்கள் தங்களது ராசியை மாற்றுகின்றன. பல கிரகங்களின் அணிவகுப்பு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறுகிறது.
ஜனவரி 13, 2026 - சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறார்.
ஜனவரி 14, 2026 - சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறார்.
ஜனவரி 16, 2026 - செவ்வாய் தனுசு ராசியில் இருந்து தனது உச்ச ராசியான மகரத்திற்கு பெயர்ச்சியாகிறார்.
ஜனவரி 17, 2026 - புதன் பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறார்.
ஜனவரி 26, 2026 - நெப்டியூன் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைய தயாராக இருப்பார்.
மகர ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் போன்ற நான்கு கிரகங்கள் பெயர்ச்சியாக இருப்பது சில ராசிகளுக்கு பொற்காலத்தை வழங்க இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
26
1.மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரிய பகவான் தொழில் ஸ்தானமான 10ஆம் வீட்டிற்கு வருகிறார். இதன் காரணமாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பணியிடத்தில் அதிகாரமும், மதிப்பு உயரும். செவ்வாய் பெயர்ச்சியால் நிலம் சார்ந்த பிரச்சினைகள் தீரும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
36
2.மிதுனம்
ஜனவரி மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகள் மிதுன ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தைத் தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி வெற்றிகளைக் காண்பார்கள். பொன், பொருள், வசதிகள் அதிகரிக்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதத்தில் நடக்கும் நான்கு கிரகங்களின் பெயர்ச்சிகள் சிறப்பான பலன்களை அளிக்கும். சூரியன் ஆறாம் வீட்டிற்கு செல்வதால் எதிரிகள் தோல்வியை சந்திப்பார்கள். கடன் சுமைகள் குறையும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். ஆரோக்கியம் மேம்படும்.
56
4.தனுசு
தனுசு ராசி ஜனவரி மாதம் சுப பலன்களை அளிக்கும் மாதமாக இருக்கும். குடும்பத்தின் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கிரகங்கள் உங்கள் ராசியில் இருந்து விலகி இரண்டாம் வீட்டிற்கு செல்வதால் பேச்சில் நிதானமும், வெற்றியும் கிடைக்கும். திடீர் பணவரவும், தொழிலில் எதிர்பாராத லாபமும் கிடைக்கும்.
66
5.மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் கிரகங்களின் சேர்க்கை நடப்பதால் மகர ராசிக்காரர்கள் தொழில் ரீதியான வெற்றிகளைப் பெறுவார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் கைகூடும். திருமண முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். கடந்த சில காலமாக இருந்த மன அழுத்தங்கள் நீங்கி தெளிவான பாதை பிறக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)