Rasi Palan 2026: திருவோணத்தில் நடக்கும் சூரிய பெயர்ச்சி.! 2026-ல் இந்த 5 ராசிகளுக்கு அரசு வேலை கிடைக்கப்போகுது.!

Published : Dec 30, 2025, 10:22 AM IST

Suriyan Peyarchi Palangal in Tamil: ஜனவரி 2026 சூரிய பகவான் திருவோண நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார். சூரியனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
16
சூரியன் திருவோண நட்சத்திரப் பெயர்ச்சி 2026

ஜோதிட கணக்கீடுகளின் படி ஜனவரி 24, 2026 சூரிய பகவான் மகர ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரத்தில் இருந்து திருவோண நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். பிப்ரவரி 6, 2026 வரை சூரியன் திருவோண நட்சத்திரத்தில் பயணிப்பார். திருவோணம் என்பது கல்வியும், ஞானமும் நிறைந்த நட்சத்திரமாகும். சூரியனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றத்தையும், எதிர்பாராத பண வரவையும் உண்டாக்கும். அந்த ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

26
மேஷம்

மேஷ ராசிக்கு சூரிய பகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். பணியிடத்தில் ஒரு குழுவை தலைமை தாங்கும் அளவிற்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றியைப் பெற்று அரசு பணிகளைப் பெறுவீர்கள்.

36
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரிய பகவான் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் கைகூடும். அதிகாரம் மிக்க பதவிகள் உங்களைத் தேடி வரும். தந்தை வழியில் சொத்துக்கள் அல்லது உதவிகள் கிடைக்கும் ஆன்மீகப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

46
சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதியாக விளங்கி வரும் சூரிய பகவான் ஆறாவது வீட்டில் அமர்கிறார். இதன் காரணமாக உங்கள் ஆளுமைத் திறன் மேம்படும். எதிரிகள் மற்றும் போட்டியாளர்களை வீழ்த்தி வெற்றி பெறுவீர்கள். அரசுப் பணிகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கடன் சுமைகள் குறைந்து, மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் தகராறுகள் தீர்க்கப்பட்டு, நல்லிணக்கம் நிலவும்.

56
கன்னி

கன்னி ராசியின் ஐந்தாம் வீட்டில் சூரிய பகவான் அமர்வதால் படைப்பாற்றல் அதிகரிக்கும். புத்திசாலித்தனத்தால் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வரும். பங்குச்சந்தை மற்றும் முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் ஏற்படும். உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

66
மகரம்

மகர ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால் உங்கள் தன்னம்பிக்கை பல மடங்கு உயரும். தலைமைத்துவ பண்பு வெளிப்படும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல நேரமாகும். அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசு வேலை கிடைப்பதற்கான காலம் நெருங்கியுள்ளது. நீங்கள் தொடங்கும் எந்த செயலும் வெற்றியில் முடியும். ஜனவரி மாத இறுதியில் புதிய உயரங்களை தொடுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories