Budhan Peyarchi 2025: கேது வீட்டில் அமர்ந்த புதன்.! இந்த 5 ராசிகளுக்கு அடி மேல் அடி விழப்போகுது.! கஷ்டம் மேல் கஷ்டம் வருமாம்.!

Published : Dec 29, 2025, 02:41 PM IST

Budhan Peyarchi Palangal: புதன் பகவான் தனுசு ராசியில் உள்ள மூல நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகி இருக்கிறார். இது சில ராசிகளுக்கு அசுப பலன்களை தரக்கூடும். அது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம். 

PREV
16
புதன் பகவான் நட்சத்திரப் பெயர்ச்சி 2025

டிசம்பர் 29, 2025 அன்று புதன் பகவான் தனுசு ராசியில் உள்ள மூல நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகியிருக்கிறார். இந்த நட்சத்திரத்தில் அவர் ஜனவரி 7 ஆம் தேதி வரை பயணிப்பார். மூல நட்சத்திரம் கேதுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நட்சத்திரமாகும். 

புதனுக்கும், கேதுவுக்கும் இடையே பகையுணர்வு இருப்பதால் இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு சவாலான மற்றும் அசுப பலன்களை தரக்கூடும். குறிப்பாக வணிகம், தகவல் தொடர்பு, முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். புதன் பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

26
ரிஷபம்

ரிஷப ராசிக்கு புதன் பகவான் எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக ரிஷப ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக சில நெருக்கடிகள் வரலாம். கொடுத்த கடன் திரும்ப வருவதில் தாமதங்கள் ஏற்படலாம். தோல் தொடர்பான ஒவ்வாமை அல்லது நரம்பு சார்ந்த சிறு உபாதைகள் ஏற்படக்கூடும். தொழில் விஷயங்களில் நிதி சார்ந்த இழப்புகள் ஏற்படலாம். வேலையில் மன அழுத்தம் அதிகரிக்கலாம். தேவையற்ற கவலைகள் உங்களை ஆட்கொள்ளலாம். தேவையில்லாமல் பணம் செலவு செய்ய நேரிடலாம். இந்த காலகட்டத்தில் அறிமுகம் இல்லாதவர்களிடம் பண பரிவர்த்தனை செய்வதை தவிர்க்கவும்.

36
மிதுனம்

மிதுன ராசியின் அதிபதியாக புதன் பகவான் விளங்கி வருகிறார். எனவே உங்கள் ராசிநாதன் கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்வது குழப்பமான மனநிலையைத் தரும். கூட்டாக தொழில் செய்து வருபவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில் நீங்கள் கடினமாக உழைத்தாலும் அதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்காமல் போகலாம். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் எழக்கூடும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். எந்த ஒரு முக்கிய ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுவதற்கு முன்னர் ஆவணங்களை நன்கு சரி பார்க்கவும்.

46
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கும் புதன் பகவான் ராசியின் அதிபதியாக விளங்குகின்றனர். இவர் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் ஏற்படலாம். தாயாரின் உடல்நலத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகக்கூடும். வீடு அல்லது வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கலாம். மன உளைச்சல் மற்றும் தூக்கமின்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்ப விஷயங்களில் தகராறுகள் ஏற்படலாம். எனவே குடும்பம் சார்ந்த ரகசியங்களை வெளியில் பகிர்வதை தவிர்க்கவும்.

56
கடகம்

புதனின் நட்சத்திர மாற்றம் கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நிலையற்றத் தன்மையை ஏற்படுத்தக்கூடும். தவறான புரிதல்களால் உறவுகளில் விரிசல் ஏற்படலாம். வேலையில் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்ழ கடன் பிரச்சனைகள் உங்களை தொந்தரவு செய்யக்கூடும். மாணவர்களுக்கு படிப்பில் கவனச் சிதறல்கள் ஏற்படலாம். கல்வி மற்றும் தொழிலில் தடைகள் உண்டாகலாம். குடும்பத்தில் சண்டைகள் மற்றும் அமைதியின்மை ஏற்படும். சேமித்த பணம் செலவாகும். வங்கி இருப்பு கரையைத் தொடங்கும். பணத்தை சேமிப்பது சவாலானதாக மாறும்.

66
மீனம்

மீன ராசியின் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதால் வேலையில் அதிக கவனம் தேவைப்படலாம். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம், மேலதிகாரிகளுடன் உரசல் ஏற்படலாம். செய்த வேலையை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய சூழல் உருவாகலாம். வேலையை மாற்றும் எண்ணம் இருப்பவர்கள் தற்சமயம் அதை தள்ளிப் போடுவது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் அல்லது பணியிடத்தில் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்கவும். தவறான புரிதல்கள் அல்லது பிற விஷயங்கள் உங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories