Sukra Peyarchi 2026: புத்தாண்டில் நடக்கும் முதல் சுக்கிர பெயர்ச்சி.! 4 ராசிகள் கோடி கோடியாக குவிக்க போறீங்க.! பொன், பொருள், நிலம் சேரும்.!

Published : Dec 29, 2025, 11:56 AM IST

2026 Puthandu Rasi Palan: 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடக்க இருக்கும் சுக்கிரப் பெயர்ச்சி குறித்தும், அதனால் பலன் பெறப்போகும் ராசிகள் குறித்தும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
15
Sukra Peyarchi 2026 Tamil

ஜோதிடத்தில் சுக்கிர பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். அவர் அன்பு, செல்வம், சுகபோகம், ஆடம்பரம், திருமண வாழ்க்கை ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். 2026 ஆம் ஆண்டு ஜனவரி 13 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:02 மணிக்கு அவர் தனுசு ராசியில் இருந்து வெளியேறி, சனி பகவானின் சொந்த வீடான மகர ராசிக்குள் நுழைகிறார். 

சுக்கிரனும் சனியும் நட்பு கிரகங்கள் என்பதால் இந்த பெயர்ச்சியால் பல ராசிகளுக்கு பொருளாதார ரீதியாக பொற்காலமாக அமைய இருக்கிறது. சுக்கிர பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
ரிஷபம்

ரிஷப ராசிக்கு அதிபதியாக சுக்கிர பகவான் விளங்கி வருகிறார். அவரின் இந்த பெயர்ச்சியானது ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்களை கொண்டு வரும். மேலும் சுக்கிர பெயர்ச்சியின்போது அவர் உங்கள் ராசிக்கு 9 ஆவது இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு வருகிறார். இதன் காரணமாக அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு நின்ற காரியங்கள் மீண்டும் வேகமெடுக்கும். அனைத்து தடைகளையும் தகர்த்து வெற்றிகளைப் பெறுவீர்கள். புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கும்.

35
கன்னி

கன்னி ராசிக்கு சுக்கிர பகவான் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருகிறார். இதன் காரணமாக கன்னி ராசிக்காரர்கள் அளவில்லாத நன்மைகளை அனுபவிப்பீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் சுப செய்திகள் கிடைக்கும். காதல் சார்ந்த விஷயங்களில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும். தங்கம், வெள்ளி, பொன், பொருள் ஆபரணங்கள் சேரும். வங்கி இருப்பு உயரும்.

45
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவான் நான்காம் இடமான சுக ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதன் காரணமாக துலாம் ராசிக்காரர்கள் வீடு, வாகனம் போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். வாடகை வீட்டில் வசித்து வருபவர்களுக்கு சொந்த வீடு கனவு நிறைவேறும் அல்லது வாடகை வீட்டில் இருந்து வீடு ஒத்திக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சொத்து தொடர்பான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தாயாரின் உடல்நலம் மேம்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

55
மகரம்

மகர ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் சுக்கிர பகவான் அமர்வதால் மகர ராசிக்காரர்களுக்கு ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி அடுத்த சில தினங்களுக்கு பொற்காலமாக அமையும். உங்கள் ஆளுமைத் திறன் மற்றும் வசீகரம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து வரம் தேடி வரும். உங்கள் மனதிற்கு பிடித்தவரை வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் உருவாகும். சமூக வட்டம் விரிவடையும். புதிய நட்புகள் உருவாகும். உறவுகள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories