2026 Rasi Palan: 2025 ஆம் ஆண்டின் கடைசி ராஜயோகம்.! 4 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட்.! வெற்றி மேல் வெற்றி வரும்.!

Published : Dec 30, 2025, 11:44 AM IST

Kendra Drishti Yog: 2025 ஆம் ஆண்டின் கடைசி சனி-புதன் சேர்க்கை டிசம்பர் 30ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக சில ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம். 

PREV
15
கேந்திர திருஷ்டி யோகம்

ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. அப்போது அவை பிற கிரகங்களுடன் இணைந்து சிறப்பு யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் டிசம்பர் 30-ஆம் தேதி பிற்பகல் 12:43 மணியளவில் சனி மற்றும் புதன் இருவரும் இணைந்து கேந்திர திஷ்டி யோகத்தை உருவாக்குகின்றனர். இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
மிதுனம்
  • சனி மற்றும் புதன் பகவானின் சேர்க்கை மிதுன ராசிக்காரர்களுக்கு முழு பலன்களை தரும். 
  • புதன் பகவான் தொழில் ஸ்தானமான பத்தாவது வீட்டிலும், சனி பகவான் சுக ஸ்தானமான நான்காவது வீட்டிலும் சங்கரிக்க இருக்கின்றனர். 
  • எனவே இந்த காலகட்டத்தில் உங்களுக்கு தொழில் ரீதியான நன்மைகள் கிடைக்கும். தடைபட்டு நின்ற வேலைகள் மீண்டும் வேகமெடுக்கும்.
  •  நிதி சார்ந்த முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுப்பீர்கள். உங்களின் திட்டமிடல்கள் லாபத்திற்கான புதிய வழிகளை திறக்கும். 
  • உடன் பிறந்தவர்களுடன் இருந்த சண்டைகள் முடிவுக்கு வரும். உடல் நலம் மேம்படும். 
  • பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தை அடைவீர்கள். பழைய முதலீடுகளில் இருந்து கணிசமான லாபம் பெறுவீர்கள்.
35
கன்னி
  • கன்னி ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் புதன் பகவானின் சேர்க்கை நிதி ரீதியான நன்மைகளை வழங்கும். 
  • வேலையில் பொறுப்புக்கள் அதிகரித்தாலும், அது உங்களுக்கு நேர்மறையான பலன்களையே அளிக்கும். 
  • கடந்த காலம் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் தற்போது பலனளிக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு தன்னம்பிக்கையை அதிகரிக்கும். 
  • குடும்பத்தில் அளவில்லாத மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிலவும். 
  • பணத்தை சேமிப்பதற்கான நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் மன அழுத்தம் குறைந்து மனம் மகிழ்ச்சியாக மாறும். 
  • புதிய வேலை பற்றிய நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
45
தனுசு
  • தனுசு ராசியில் புதன் பகவான் லக்ன ஸ்தானத்திலும், சனி பகவான் நான்காம் வீட்டிலும் சஞ்சரிக்க இருக்கின்றனர். இதன் காரணமாக தனுசு ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். 
  • வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் திறக்கப்படும். முதலீடுகள் நல்ல லாபத்தை தரும். 
  • உங்கள் கடின உழைப்புக்கும், ஒழுக்கத்திற்கும் ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். எதிர்கால திட்டங்கள் வலுவடையும். 
  • பதவி உயர்வு அல்லது பதவி மாற்றம் சாத்தியமாகும். குடும்ப விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். 
  • நீங்கள் நம்பிக்கையுடன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கும்.
55
மீனம்
  • மீன ராசிக்கு சனி-புதன் சேர்க்கை சிறப்பான நன்மைகளைத் தரும். சனி பகவான் லக்ன ஸ்தானத்திலும், புதன் பகவான் தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரிக்க இருக்கின்றனர். 
  • எனவே இந்த காலகட்டத்தில் புதிய வீடு கட்டுதல் அல்லது பழைய வீட்டை பராமரிப்பு செய்தல், மனை வாங்குதல், நிலம் வாங்குதல் போன்ற உங்கள் கனவுகள் நனவாகும். 
  • வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் செய்து வருபவர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும்.
  • வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். நிதி நிலைமை படிப்படியாக மேம்படும். பல வழிகளில் சிக்கி இருந்த பணம் மீட்கப்படும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories