
Sani Peyarchi 2025 Palan For Top 5 Lucky Zodiac Signs : சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசி மாறுவார். தற்போது கும்ப ராசியில் உள்ள சனி பகவான் 2025 ஆம் ஆண்டு மீன ராசிக்குள் நுழையும். இது சுமார் இரண்டரை ஆண்டுகள் மீன ராசியில் இருக்கும். இந்த பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெறும். இந்த பெயர்ச்சியால், பல கஷ்டங்களைச் சந்தித்த சில ராசிக்காரர்களுக்கு நிம்மதி கிடைக்கும். நீண்ட காலமாக அவர்களைப் பாடாய்படுத்திய ஏழரைச் சனி முடிவுக்கு வரும். கஷ்டங்கள் மறைந்து, மகிழ்ச்சி வரும். அவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னென்ன என்று பார்ப்போம்...
1. கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு முன்னேற்றமான ஆண்டாக இது அமையும். சனி 9 ஆம் வீட்டிற்குச் செல்வதால், அஷ்டமச் சனியால் ஏற்பட்ட கஷ்டங்கள் மறைந்துவிடும். நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளிநாடு செல்வீர்கள். செலவுகள் குறையும். வருமானம் அதிகரித்து காசு, பணம் சேரும். ராஜவாழ்க்கை வாழும் அளவிற்கு சனி பகவான் உங்களை வாழ்க்கையில் முன்னேற்றுவார்.
2. ரிஷபம்:
அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு சனியின் நல்ல தாக்கத்தால், ரிஷப ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களிலும் சாதகமான பலன்களை அனுபவிப்பார்கள். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வேலைப்பளு குறையும். தொழில் விருத்தியாகும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். இதுவரையில் எந்த வகையில் எல்லாம் உங்களுக்கு சனி பகவானால் கஷ்டம் இருந்ததோ இனி வரும் காலங்களில் அதிலெல்லாம் உங்களுக்கு முன்னேற்றம் தான்.
3. மகரம்:
ஏழரைச் சனியிலிருந்து விடுபடுவீர்கள். ஏழரைச் சனியால் அனுபவித்த கஷ்டங்களுக்கு இறுதியாக பலன் கிடைக்கும். முன்னேற்றம் வரும். நீங்கள் மேன்மை நோக்கி நகர்வீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். புதிய வீட்டிற்குச் செல்ல வாய்ப்புள்ளது. கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். உடல்நிலை சீராகும். சனி உங்கள் அந்தஸ்தை உயர்த்தும். குழந்தை பாக்கியம் கிடைக்க பெறுவீர்கள். செலவுகள் குறையும், உடல்நிலை சீராகும். பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைக்கும் பொன்னான ஆண்டாக இந்த 2025 ஆம் ஆண்டு சனி பெயர்ச்சி உங்களுக்கு அமைய போகிறது.
4. துலாம்:
சனி மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவதால், தொழிலில் லாபம் அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாள் நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். நிதி நெருக்கடிகள் தீரும். உங்கள் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். தொடர் வெற்றிகள் கிடைக்கும். இதுவரையில் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு புதிதாக வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்களை அவமானப்படுத்தியவர்கள் தேடி வந்து பேசுவார்கள். கையில் காசு, பணம் இருந்து கொண்டே இருக்கும்.
5. விருச்சிகம்:
வருமானத்திற்கான வழிகள் அதிகரிக்கும். தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று, வீட்டில் மகிழ்ச்சி நிலவும். நிதிப் பிரச்சினைகள் தீரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். வேலைப்பளு குறையும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். வெளியூர், வெளிநாட்டு செல்லும் வாய்ப்பு உருவாகும். எதிரிகள் தொல்லை இனி இருக்காது. சனி பகவான் உங்களுக்கான முன்னேற்ற பாதையை உருவாக்கி கொடுப்பார்.