ஜோதிடத்தின் படி நவகிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. நவகிரகங்களில் இளவரசனாக கருதப்படும் புதன் பகவான், சந்திரனுக்கு அடுத்தபடியாக வேகமாக ராசியை மாற்றக் கூடியவர். இவர் புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம், பேச்சு ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். தற்போது சிம்ம ராசியில் பயணித்து வரும் இவர் செப்டம்பர் 15்ஆம் தேதி தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழைய இருக்கிறார். அவரைத் தொடர்ந்து கிரகங்களின் தலைவனான சூரியன் செப்டம்பர் 17 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழைய இருக்கிறார். இதனால் கன்னி ராசியில் புதன் மற்றும் சூரியன் இணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது.
இந்த ராஜயோகம் மிகவும் சுபமானதாகவும், மங்களகரமானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இது புதனின் சொந்த ராசியான கன்னி ராசியில் உருவாக இருப்பதால் இந்த ராஜயோகம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வரவுள்ளது. இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் அதிக பலன்களை கொடுக்க இருக்கிறது. அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.