Raja Moksha Yoga : லஹிரி கணக்கீட்டின்படி நவம்பர் 12, 2026 அன்று குருவும் கேதுவும் சிம்ம ராசியில் மிக நெருக்கமாக, மகம் நட்சத்திரத்தில் இணைகிறது. அப்போது உருவாகும் ராஜ மோட்ச யோகத்தால் 5 ராசிக்காரர்களின் வாழ்வில் அளவில்லா பலன்கள் கிடைக்கப் போகிறது.
சுமார் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு ராசியையும் கடந்து செல்லும் குரு, 2026 அக்டோபர் 31-ம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைய உள்ளார். இதே சிம்ம ராசியில் ஏற்கனவே கேது பயணித்து வருகிறது. இதனால் நவம்பர் மாதத்தில் குரு-கேது சேர்க்கை அல்லது குரு-கேது யுதி உருவாகிறது. இது ராஜ மோட்ச யோகம் என்றும் சில ஜோதிடர்களால் அழைக்கப்படுகிறது.
இந்த யோகம் கைகூடும் போது, உலகியல் ரீதியான லட்சியங்களை அடைவதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும் தெளிவும் உண்டாகும். இதுவரை தேக்க நிலையில் இருந்த காரியங்கள் வேகமெடுப்பதோடு, திடீர் தனவரவும் உத்தியோகத்தில் உயர்ந்த பதவிகளும் உங்களைத் தேடிவரும். இந்த ராஜ மோட்ச யோகத்தால் அளவில்லா பலன்களைப் பெறப் போகும் 5 ராசிகள் எவை என பார்ப்போம்.
1. மேஷம் - படைப்பாற்றலும் புதிய வாய்ப்புகளும் பெருகும் காலம்!
யோக பலன்கள்: மேஷம் ராசிக்கு 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இந்த குரு-கேது சேர்க்கை நிகழ்கிறது.
அளவிலான பலன்கள்: கல்வி, திறமை, படைப்பாற்றல் மற்றும் குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் புதிய ஒளி பிறக்கும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன லட்சியங்களை மீண்டும் கையில் எடுத்து வெற்றி பெறுவீர்கள். வழக்கமான பாதையை மாற்றிப் புதிய முயற்சிகளில் இறங்கும் போது மகத்தான லாபம் கிடைக்கும்.
யோக பலன்கள்: மிதுனம் ராசிக்கு 3-ம் இடமான தைரிய, வீரிய மற்றும் முயற்சி ஸ்தானத்தில் இந்த சேர்க்கை அமைகிறது.
அளவிலான பலன்கள்: எழுத்து, ஊடகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பொன்னான காலமிது. புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் அரிய தொடர்புகள் மூலம் கைநிறைய வருமானம் ஈட்டும் வாய்ப்பு உருவாகும். நீண்ட நாள் தயக்கம் நீங்கி அதிரடியான முடிவுகளை எடுப்பீர்கள்.
3. துலாம் - லாபஸ்தானத்தின் மகா பலனால் கொட்டப் போகும் செல்வம்!
யோக பலன்கள்: துலாம் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் இந்த யோகம் உருவாகிறது.
அளவிலான பலன்கள்: தொழில் மற்றும் வியாபாரம் மூலம் வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த தொகை கைக்கு வந்து சேரும். பழைய நண்பர்கள் மற்றும் தொடர்புகள் மூலம் புதிய வருமான வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும்.
அளவிலான பலன்கள்: உயர்கல்வி கற்பவர்களுக்கும், வெளிநாடு செல்ல முயல்பவர்களுக்கும் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். பணியிடத்தில் மேலதிக பொறுப்புகளும் அதிகாரமும் தேடிவரும். வாழ்க்கையின் மிக முக்கியமான தெளிவான முடிவுகளை எடுக்க இந்தக் காலம் பெரிதும் உதவும்.
யோக பலன்கள்: கும்ப ராசிக்கு 7-ம் இடமான களத்திர ஸ்தானத்தில் இந்த மகா யோகம் நிகழ்கிறது.
அளவிலான பலன்கள்: கூட்டுத்தொழில் மற்றும் வியாபார ஒப்பந்தங்களில் மிகப்பெரிய வெற்றிகளைக் குவிப்பீர்கள். திருமணம் கைகூடாமல் தள்ளிப்போனவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
பொறுப்புத் துறப்பு : இக்கட்டுரை பொதுவான ஜோதிட விதிகள் மற்றும் பாரம்பரியக் கணிப்புகளின் அடிப்படையில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட ஜாதக அமைப்புகளுக்கு ஏற்ப பலன்களில் மாற்றங்கள் இருக்கலாம்.