Astrology Predictions: புதன் அருளால் கொட்டப் போகும் பணம்.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்!

Published : Sep 17, 2026, 02:06 PM IST

Astrology Predictions: புதனின் ஹஸ்த நட்சத்திர சஞ்சாரத்தால் 4 ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான லாபமும், புதிய வேலை வாய்ப்புகளும், எதிர்பாராத தனவரவும் தேடி வரப்போகுது. இவை எந்தெந்த ராசிகள்? என பார்க்கலாம்.

PREV
15
புதன் பெயர்ச்சி 2026

ஜோதிட சாஸ்திரத்தின்படி நவகிரகங்களின் இளவரசனாக போற்றப்படும் புதன் பகவான், தற்போது தனது சொந்த ராட்சியான கன்னி ராசியில் அமர்ந்துள்ளார். இத்துடன், சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த 'ஹஸ்த நட்சத்திரத்தில்' அவர் பயணம் செய்து வருகிறார். கன்னி ராசியில் புதன் வலுப்பெறுவதுடன், ஹஸ்த நட்சத்திரத்தின் சஞ்சாரமும் இணைவது கூடுதல் சிறப்பு வாய்ந்த பலன்களைத் தரக்கூடியது. புதன் பகவான் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை இதே நட்சத்திரப் பாதையில் தொடர்வார்.

புதனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் தொழில், வணிகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் மிகப்பெரிய அளவிலான முன்னேற்றங்களையும், புதிய பொன்னான வாய்ப்புகளையும் பெறப் போகிறார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னென்ன? என விரிவாக பார்ப்போம்.

25
1. மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்தக் காலம் தொழில் ரீதியான இலக்குகளை மிக விரைவாக அடைய வழிவகுக்கும். நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் தேங்கி நின்ற உங்களின் வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும். பணியிடத்தில் உங்களின் கடின உழப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும்; மேலும் புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரலாம்.

உங்கள் வாழ்க்கையின் போக்கையே மாற்றக்கூடிய ஒரு சிறப்பான மனிதரின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை உயருவதால் எந்த சவால்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். வாழ்க்கைத்துணையுடன் இனிமையான தருமானங்களைச் செலவிடுவீர்கள். உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும்.

35
2. கடகம்

கடக ராசிக்காரர்கள் வாழ்வில் குறிப்பிடத்தக்க எழுச்சியைக் காணப் போகிறார்கள். உங்கள் எண்ணங்களை தெளிவாகவும் வெளிப்படையாகவும் வெளிப்படுத்தும் விதம், முக்கியமான சிக்கல்களுக்குத் தீர்வு காணவும் சரியான முடிவுகளை எடுக்கவும் கை கொடுக்கும். இதுவரை உங்களது கரியரில் இருந்த தடைகள் விலகும். பொருளாதார நிலை மிகவும் வலுவடையும்.

பல்வேறு வழிகளிலும் லாபம் பார்ப்பதற்கான வாய்ப்புகள் கதவு தட்டும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதுடன், சேமிப்பும் உயரும். புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே பணியில் இருப்போருக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஒட்டுமொத்தமாக உங்கள் வாழ்வில் வெற்றியும் அதிர்ஷ்டமும் கைகோர்க்கும்.

45
3. கன்னி

கன்னி ராசியிலேயே புதன் சஞ்சரிப்பதால், இந்த நட்சத்திர மாற்றம் இவர்களுக்கு முதலீடுகள் மற்றும் வியாபாரத்தின் மூலம் எதிர்பாராத நிதி லாபத்தைத் பெற்றுத் தரும். சொந்தத் தொழிலில் உள்ளவர்கள் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்தவும், வருமானத்தை அதிகரிக்கவும் உதவக்கூடிய லாபகரமான ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். உங்களின் நிதிநிலை மிகச் சிறப்பாக மாறுவதுடன், நீண்ட கால முதலீடுகளுக்கு இது பொன்னான காலமாகும்.

புதிய வருமான மூலங்கள் உருவாகும். வாழ்வின் பல துறைகளில் மகிழ்ச்சி மலரும். புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும் அறிவை வளர்த்துக்கொள்வதற்கும் ஏற்ற நேரம் இது. பெற்றோரின் உடல்நலம் மேம்படும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு தேடி முயற்சிப்பவர்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

55
4. சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த நட்சத்திரப் பயணம் எதிர்பாராத தனவரவையும், பொருளாதார ரீதியான திடீர் முன்னேற்றத்தையும் தரும். நீண்ட நாட்களாக வசூலாகாமல் இருந்த தொகைகள் கைக்கு வந்துசேரும். சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூட்டாளிகள் மூலம் புதிய லாபத்தைப் பெறுவார்கள்.

உங்களின் பேச்சுத் திறமையால் பல காரியங்களை எளிதில் சாதித்துக் காட்டுவீர்கள். கலை மற்றும் கல்வித்துறைகளில் இருப்போருக்குத் தனித்துவமான மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவுவதுடன், நீண்ட தூர பயணங்கள் மூலமாக லாபகரமான பலன்களைப் பெறுவீர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories