Published : Feb 10, 2025, 02:06 PM ISTUpdated : Feb 10, 2025, 07:36 PM IST
Venus Rahu Conjunction in Pisces 2025 Palan in Tamil : ஜோதிடத்தின் படி, 18 வருடங்களுக்குப் பிறகு மீன ராசியில் ராகுவும் சுக்கிரனும் இணைந்துள்ள நிலையில் இந்த சேர்க்கை 3 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்க போகிறது.
Rahu Venus Conjunction in Pisces Palan in Tamil : ஜோதிடத்தில் சனி, குரு, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இவை ஜாதகத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. ராகு நிழல் கிரகம். சாதகமற்ற நிலையில் இருந்தால் ஜாதகருக்கு கெடு பலன்களை தான் ராகு பகவான் தருவார். இதுவே ஒரு ஜாதகர் ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அவரது வாழ்க்கையில் படாத கஷ்டங்களை படுவார். பொருளாதார பிரச்சனைகளையும் அவர் எதிர்கொள்ள நேரிடும்.
இதுவே ராகு பகவான் ஜாதகருக்கு நல்ல நிலையில் இருந்தால் அவர் கொடுக்கும் பலனை யாராலும் தடுக்க முடியாது. ஜாதகரை உச்சநிலைக்கு கொண்டு செல்லும் வேலையை ராகு பகவான் செய்வார். இப்போது ராகு பகவான் மீன ராசியில் டிராவல் செய்து கொண்டிருக்கிறார். மீனத்தில் ஏற்கனவே சுக்கிரன் இருக்கிறது. ஜோதிடத்தின் படி, இரண்டு கிரகங்கள் இணையும்போது, அது நாட்டிலும் உலகிலும் எல்லா ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தப் பாதிப்பு நல்லதாகவும், கெட்டதாகவும் இருக்கும்.
ஜோதிடத்தின் படி, சுக்கிரன் ஜனவரி 29, 2025 அன்று மீன ராசிக்குள் நுழைந்தார். ராகு ஏற்கனவே மீன ராசியில் பயணிக்கிறார். இந்தச் சூழ்நிலையில், மீன ராசியில் ராகுவும் சுக்கிரனும் இணைந்துள்ளனர். ராகு-சுக்கிரன் சேர்க்கை 18 வருடங்களுக்குப் பிறகு நடக்கிறது. இந்தச் சேர்க்கை 3 ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும். அந்த 3 ராசிகள் என்னவென்று இங்கே பார்க்கலாம்.
35
மிதுன ராசிக்கு ராகு சுக்கிரன் சேர்க்கை பலன்
ராகு-சுக்கிரன் சேர்க்கை மிதுன ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தரும். வியாபாரம் மற்றும் வேலையில் நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கலாம். மிதுன ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். திடீரென்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நின்றுபோன வேலைகள் முடியத் தொடங்கும். செல்வம் பெருகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வசதி வாய்ப்புகள் பெருகும். வங்கி சேமிப்பு உயரும்.
கடக ராசிக்காரர்களுக்கு ராகு-சுக்கிரன் சேர்க்கையால் நன்மை உண்டாகும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். இந்தச் நேரங்களில் நீங்கள் எல்லா இலக்குகளையும் அடைவீர்கள். வேலை செய்பவர்கள் உயர் பதவியைப் பெறலாம். திருமணமானவர்களின் உறவு வலுவடையும். பொருளாதார நிலை முன்பை விட மேம்படும். பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய வீடு, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள்.
மீன ராசிக்காரர்களுக்கு ராகு-சுக்கிரன் சேர்க்கை நல்லது. உங்கள் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தைச் செலவிடுவீர்கள். வியாபார நோக்கங்களுக்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. மதச் சடங்குகளில் ஆர்வம் அதிகரிக்கும். செல்வத்தால் லாபம் கிடைக்கும். பொருளாதார நிலை முன்பை விட மேம்படும். எதிர்பாராத பணம் கிடைக்கலாம். திருமணமானவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம். வேலை இல்லாத இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள்.