ராகு பகவான் சதய நட்சத்திர பெயர்ச்சியாகும் பொழுது தனுசு ராசியின் மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார். அவரின் இந்த நட்சத்திர மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். பல்வேறு மூலங்களிலிருந்தும் நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். உடல் நலத்திலும் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். இதுவரை அனுபவித்து வந்த உடல்நலக் கோளாறுகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். வேலை மாற்றம் விரும்புவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். பணியிடத்தில் சம்பள உயர்வு கிடைக்கும். உங்கள் தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)