எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 5 ஆம் தேதியில் பிறந்தவர்கள் ரொம்பவே சுறுசுறுப்பானவர்கள். அவர்கள் படிக்கும் பாடம், செய்யும் வேலை என அனைத்தையும் உற்சாகமாக செய்வார்கள். மேலும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். வாழ்க்கையில் வரும் தடைகளை உறுதியாக தாங்கி நிற்பார்கள். அனுபவத்திலிருந்து புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். வாழும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று ஆசை இருப்பதால் அதன்படி வாழ்வார்கள். இவர்கள் பிறருடன் எளிதில் பழகுவார்கள். புதிய தொழில்நுட்பம் மற்றும் பல விஷயங்களை பற்றி அறிந்து கொள்வார்கள். இவர்களுக்கு தெரியாதது எதுவுமே இல்லை. இவர்கள் ஒரு துறையில் வேலை பார்த்தாலும், பல துறைகளில் அறிவு இவர்களுக்கு உண்டு.