June 27: இன்றைய ராசி பலன்: அட! இவர்களுக்கு காதல் கைகூடும் நாள்!

Published : Jun 27, 2025, 06:14 AM IST

இன்றைய ராசி பலன்கள் உங்களுக்கு மர்மமான சந்திப்புகள், தொழில் வெற்றிகள், குடும்ப மகிழ்ச்சி மற்றும் ஆன்மீக நன்மைகளை முன்னறிவிக்கின்றன. செலவுகளைக் கட்டுப்படுத்தி, பரிகாரங்களை மேற்கொண்டு, உகந்த முதலீடுகளைச் செய்யுங்கள்.

PREV
112
மேஷம் (Aries)

இன்று முயற்சிகள் சிறந்த பலனை தரும். தொழிலில் வளர்ச்சி கண்டு மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். மனநிலை உற்சாகமாக இருக்கும். நண்பர்களுடன் சந்திப்பு உண்டு. செலவுகளை கட்டுப்படுத்துங்கள். நட்சத்திரம்:

அசுவினி – ஆனந்தம் தரும் நாள்.

பரணி – பண வரவு நன்றாக இருக்கும்.

கிருத்திகை – புதிய யோசனைகள் வரும். 

பரிகாரம்: விநாயகர் பூஜை. 

முதலீடு: நில முதலீடு உகந்தது.

212
ரிஷபம் (Taurus)

முன்னேற்றம் தரும் நாள். வேலை வாய்ப்புகள் விரிவாகும். குடும்ப உறவுகள் வலுப்படும். திடீர் செலவுகள் வரலாம். ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆன்மீக சிந்தனைகள் மேலோங்கும். 

கிருத்திகை – பயணம் நன்மை தரும்.

ரோஹிணி – பிள்ளைகளால் மகிழ்ச்சி.

மிருகசீரிடம் – முயற்சியில் வெற்றி. 

பரிகாரம்: லட்சுமி பூஜை. 

முதலீடு: தங்கம் முதலீடு நன்று.

312
மிதுனம் (Gemini)

பண்புடன் பேசுதல் இன்று உங்களுக்கு நல்ல பலனை தரும். தொழிலில் புதிய அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். செலவு சுமாராக இருக்கும். மன நிம்மதி கிடைக்கும். 

மிருகசீரிடம் – தொழிலில் முன்னேற்றம்.

திருவாதிரை – புதிய வாய்ப்பு.

புனர்பூசம் – ஆனந்தம் தரும் செய்தி. 

பரிகாரம்: விஷ்ணு வழிபாடு. 

முதலீடு: மியூச்சுவல் ஃபண்ட் உகந்தது.

412
கடகம் (Cancer)

ஆன்மீக நன்மை கிடைக்கும் நாள். குடும்ப உறுப்பினர்களை சந்திப்பீர்கள் அதன் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும்.பணவரவு திருப்தியாக இருக்கும். உடல் நலம் மேம்படும். பயணம் சுபமாயிருக்கும். காதல் கைகூடும் வாய்ப்புகள் உருவாகும்.

புனர்பூசம் – பிள்ளைகளால் பெருமை.

பூசம் – நினைத்தது நிறைவேறும்.

ஆயில்யம் – மனநிலை சீராகும். 

பரிகாரம்: சந்திர வழிபாடு. 

முதலீடு: நில முதலீடு நல்லது.

512
சிம்மம் (Leo)

உற்சாகம் அதிகரிக்கும் நாள். தொழிலில் நம்பிக்கை கூடும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். திட்டமிட்டு செலவிடுங்கள். பயண யோகம் உண்டு. 

மகம் – பண வரவு அதிகம்.

பூரம் – நல்ல சந்திப்பு.

உத்திரம் – புதிய முயற்சி வெற்றி. 

பரிகாரம்: சூரிய வழிபாடு. 

முதலீடு: பங்குச் சந்தை உகந்தது.

612
கன்னி (Virgo)

பழைய பிரச்சினைகள் தீரும். காதலர்கள், கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி நெருக்கம் ஏற்படும். வேலை வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செல்வாக்கு கூடும். செலவுகள் சுமாராக இருக்கும். 

உத்திரம் – பயணம் நன்மை தரும்.

ஹஸ்தம் – புதிய ஆதாயம்.

சித்திரை – சந்தோஷ செய்தி வரும். 

பரிகாரம்: விநாயகர் வழிபாடு. 

முதலீடு: நில முதலீடு நல்லது.

712
துலாம் (Libra)

தொழில் தொடர்பான திடீர் சந்திப்பு உண்டாகும் நாள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப மகிழ்ச்சி மேலோங்கும். புதிய முயற்சி வெற்றி தரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

சித்திரை – வேலை முன்னேற்றம்.

சுவாதி – பண வரவு நன்று.

விசாகம் – உற்சாகம் தரும் சந்திப்பு. 

பரிகாரம்: லட்சுமி பூஜை. 

முதலீடு: நில முதலீடு நல்லது.

812
விருச்சிகம் (Scorpio)

நல்ல செய்தி வரும். தொழிலில் உயர்வு ஏற்பட வாய்ப்பு. குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். மனநிலை தெளிவு பெறும். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். 

விசாகம் – பணவரவு அதிகம்.

அனுஷம் – புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

கேட்டை – ஆனந்த நாள். 

பரிகாரம்: அனுமன் வழிபாடு. 

முதலீடு: பங்கு முதலீடு சாதகம்

912
தனுசு (Sagittarius)

இன்று மனநிலை சந்தோஷம் தரும். பழைய நட்புகள் மீண்டும் தொடங்கும். தொழிலில் வாய்ப்பு கிடைக்கும்.  உடல் ஆரோக்கியம் மேம்படும். காதலில் உள்ளோர் அதனை வெளிப்படுத்தும் சிந்தனை மேலோங்கும். பரிசுகள் கிடைக்கும் நாள்.

மூலம் – பயணம் சந்தோஷம் தரும்.

பூராடம் – தொழிலில் முன்னேற்றம்.

உத்திராடம் – குடும்ப மகிழ்ச்சி. 

பரிகாரம்: குரு வழிபாடு. 

முதலீடு: கல்வி முதலீடு நல்லது.

1012
மகரம் (Capricorn)

தொழிலில் சிறந்த வளர்ச்சி ஏற்படும் நாள் இன்று. குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். ஆன்மீக சிந்தனைகள் மேலோங்கும். ஆயலங்களுக்கு சென்று வர வாய்ப்புகள் ஏற்படும். செலவு கட்டுப்பாடு அவசியம். 

உத்திராடம் – புதிய வாய்ப்பு.

திருவோணம் – நிதி மேம்பாடு.

அவிட்டம் – பயண நன்மை. 

பரிகாரம்: சனி வழிபாடு. 

முதலீடு: நில முதலீடு உகந்தது.

1112
கும்பம் (Aquarius)

முக்கிய முடிவு எடுக்கும் நாள். தொழிலில் வெற்றி கிடைக்கும். குடும்ப உறவுகளில் நன்மை ஏற்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அவிட்டம் – நல்ல முடிவுகள் எடுப்பீர்கள்.

சதயம் – பணவரவு சந்தோஷம் தரும்.

பூரட்டாதி – புதிய முயற்சி. 

பரிகாரம்: விநாயகர் பூஜை. 

முதலீடு: பங்கு முதலீடு நல்லது.

1212
மீனம் (Pisces)

திடீர் சந்திப்புகள் மனநிறைவு தரும். வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆன்மிக சிந்தனைகள் மேலோங்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகம். 

பூரட்டாதி – பயணம் நன்மை தரும்.

உத்திரட்டாதி – சந்தோஷமான சந்திப்பு.

ரேவதி – மன அமைதி. 

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி பூஜை. 

முதலீடு: பங்கு முதலீடு சாதகமாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories