எண் கணிதத்தின் படி, சில தேதிகளில் பிறந்தவர்கள் திடீரென பணக்காரர் ஆகி விடுவார்கள் என்று சொல்கிறது. நீங்கள் அந்த தேதியில் பிறந்திருக்கிறீர்களா? என்று தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
எண் கணிதத்தின் படி, ஒரு நபரின் பிறந்த தேதியை வைத்து அவரது ஆளுமை, குணம், இயல்பு மற்றும் எதிர்கால வாழ்க்கையை கணிக்க முடியும் என்று கூறுகிறது. ஒவ்வொரு எண்ணும் ஒவ்வொரு கிரகத்துடன் தொடர்புடையது என்று சொல்லப்படுகிறது. இன்றைக்கு சூழ்நிலையில் சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்பவே அதிர்ஷ்டசாலிகள் என்று எண் கணிதம் சொல்லுகிறது. ஏனெனில் அவர்கள் திடீரென பணக்காரரராகிவிடுவார்கள். நீங்கள் அந்த தேதியில் பிறந்திருக்கிறார்களா? என்று இப்போது இங்கு பார்க்கலாம்.
25
எந்த தேதியில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்?
எண் கணிதத்தின் படி எந்த மாதத்திலும் 4,13, 22 அல்லது 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் எண் 4 ஆகும். இந்த என் ராகு கிரகத்தால் ஆளப்படுகிறது என்பதால் இந்த எண்களில் பிறந்தவர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.
35
எண் 4
எந்த மாதத்திலும் 4 என்ற தேதியில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள் வெற்றியை பெறுவதற்கே பிறந்தவர்கள் என்று எண் கணிதம் சொல்லுகிறது. இவர்கள் ஒரு வேலையில் ஈடுபட்டால் அதில் மூழ்கி விடுவார்கள். இவர்களுடன் அதிர்ஷ்டம் இணைந்திருப்பதால் இவர்கள் திடீரென பணக்காரர்களாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இது எண்களில் பிறந்தவர்கள் ரிஸ்க் எடுக்க ஒருபோதும் தயங்கவே மாட்டார்கள். இவர்களிடம் இருக்கும் கூர்மையான அறிவுத்திறன் மற்றும் தனித்துவமான யோசனைகள் காரணமாக அவர்கள் நல்ல முடிவுகளை தான் எடுப்பார்கள். முக்கியமாக இவர்கள் புதிய வாய்ப்புகளில் தேடுவதில் ரொம்பவே ஆர்வமாக இருப்பார்கள்.
55
எந்தத் துறை பெஸ்ட்?
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அரசியல் ஊடகம் நீதி போன்ற துறைகளில் ரொம்பவே சிறந்து விளங்குவார்கள். அவர்களிடம் இருக்கும் ஆழ்ந்த சிந்தனை மற்றும் செல்வாக்கு மிக்க ஆளுமை காரணமாக அவர்கள் செல்லும் துறையில் உச்சத்தில் இருப்பார்கள். இவர்கள் ஒழுக்கமானவர்கள் மற்றும் நேர்மையானவர்கள் என்பதால் சமூகத்தில் அவர்களுக்கு அதிகம் மரியாதை கிடைக்கும்.