இந்த ராசிக்காரர்களுக்கு அதிக உள்ளுணர்வு சக்தி உள்ளதாம்.. உங்க ராசியும் லிஸ்டுல இருக்கா?

First Published | Aug 21, 2023, 12:04 PM IST

ஜோதிடத்தில், ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான உள்ளுணர்வு திறன்கள் உள்ளன. எனவே உங்கள் ராசிக்கு உள்ளுணர்வு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உள்ளுணர்வு என்பது நம் ஆழ் மனதில் உள்ள ஒரு உணர்வு ஆகும். பொதுவாக நம் உள்ளுணர்வு என்பது ஒரு நிகழ்வு நடக்கும் முன் அதன் விளைவைப் பற்றி நமக்குத் தெரிவிக்கிறது. ஏதேனும் ஒரு நிகழ்வு நடக்கப்போகிறது என்பது சிலருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கும். இப்போதெல்லாம் அதை " vibes" என்று கூறுகின்றனர். எனக்கு நல்ல vibes கிடைக்கவில்லை என்று கூறுவதை கேட்கலாம். ஜோதிடத்தில், ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான உள்ளுணர்வு திறன்கள் உள்ளன. எனவே உங்கள் ராசிக்கு உள்ளுணர்வு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் அதிக உள்ளுணர்வு சக்திகளைக் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள், ஏனெனில் மேஷம் ராசியில் முதல் நட்சத்திரமான அஷ்வினியும் உள்ளது. இந்த ராசியின் அதிபதிகள் செவ்வாய் மற்றும் அஸ்வினிகுமாரர்கள் என்று கருதப்படுகிறார்கள். செவ்வாய் என்பது ஆற்றல்மிக்க கிரகம். எனவே, இந்த சொந்தக்காரர்கள் எப்போது பின்வாங்க வேண்டும் என்பதை உணர முடியும்.

செவ்வாய் கிரகத்தின் தன்மை காரணமாக மேஷ ராசிக்காரர்கள் அதிக உள்ளுணர்வு சக்திகளுடன் இருக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் எதிர்மறை உள்ளுணர்வு கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்கள் ”இன்று நான் ஏன் வேறு வழியில் சென்றேன் என்று தெரியவில்லை இல்லையென்றால் இன்று அந்த விபத்தில் சிக்கியிருப்பேன்” என்று கூறுவார்கள்.

Latest Videos


மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் அதிக உள்ளுணர்வு சக்தி கொண்டவர்கள். மிதுன ராசி, புத்திசாலியான புதன் கிரகத்தால் ஆளப்படுகிறது. எனவே, மிதுன ராசிக்காரர்கள் தங்கள் சுற்றுப்புறங்களை ஒப்பீட்டளவில் அதிகமாகக் கவனிக்கக்கூடியவர்கள், அதனால்தான் அவர்கள் பெரும்பாலும் தங்கள் சுற்றுப்புறத்தின் ஒளி அல்லது அதிர்வுகளை அடையாளம் காணவோ அல்லது உணரவோ முடியும்.

இதனால் அதிக உணர்ச்சி உணர்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். மிதுன ராசிக்காரர்கள், பலரை உள்ளுணர்வாக நிராகரிப்பதால், தங்கள் துணையைத் தேர்ந்தெடுப்பதில் சிரமம் அடைகிறார்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் அதிக உள்ளுணர்வு சக்தி கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. தங்கள் வாழ்க்கை சூழ்நிலைகளில் தாய்வழி உள்ளுணர்வுகளைக் கொண்டுள்ளனர். எனவே இந்த ராசியின் சொந்தக்காரர்கள் பாசமிக்கவர்களாகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும் இருப்பார்கள், மேலும் புதன் அதன் அதிபதியாக இருப்பதால், அவர்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல, அவர்களின் அன்புக்குரியவரின் வாழ்க்கையிலும் மக்களை அடையாளம் காணவும் உணரவும் உதவுகிறது.

பொதுவாக அனைவருக்கும் பிடித்த ஒரு நபரை கன்னி ராசிக்காரர்களுக்கு பிடிக்காது. அனைவருக்கும் அவனை பிடிக்கும் ஆனால் நான் அவர்களைப் பற்றி மோசமான எண்ணம் கொண்டிருக்கிறேன்" என்று அவர்கள் கூறுவார்கள்

மீனம்

மீன ராசிக்காரர்கள் அதிக உள்ளுணர்வு சக்தியைக் கொண்டுள்ளனர். மீன ராசிக்கு வியாழன் அதிபதி, இது அறிவு மற்றும் ஞானத்தின் ஆட்சியாளர். எனவே மீன ராசிக்கார்கள் அதிக உள்ளுணர்வு சக்தி இருக்கிறது. அவர்கள் பெரும்பாலும் நேர்மறையான உள்ளுணர்வைக் கொண்டுள்ளனர், மேலும் இந்த ராசிக்கார்கள் தங்களை விட மற்றவர்களுக்காக தங்கள் உள்ளுணர்வு சக்தியைப் பயன்படுத்துவதாக அறியப்படுகிறார்கள்.

இந்த நபர்கள் பொதுவாக தங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் வேறு ஒருவரால் கட்டுப்படுத்தப்படுகிறார்களா என்பதை முதலில் உணருவார்கள், 

click me!