குரு வக்ர பெயர்ச்சி 2023.. இந்த ராசிகளுக்கு அடுத்த 4 மாதங்களுக்கு அமோகமான காலம்..

First Published | Aug 21, 2023, 9:40 AM IST

கடந்த ஏப்ரல் 22 முதல் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்த குரு பகவான், செப்டம்பர் 4-ம் தேதி காலை 9.15 மணி மேஷ ராயிலேயே பெயர்ச்சி அடைகிறார். குருவின் வக்ர பெயர்ச்சியால் யாருக்கு யோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

குரு வக்ர பெயர்ச்சி 2023

ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்கள் அனைத்தும் ஒவ்வொரு ராசிக்கும் மாறும் போது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் இந்த கிரகங்கள் பின்னோக்கி செல்கின்றன. அப்படி கிரகங்கள் பின்னோக்கி செல்லும் போது அது வக்ர காலம் என்று அழைக்கப்படுகிரது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 22 முதல் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்த குரு பகவான், செப்டம்பர் 4-ம் தேதி காலை 9.15 மணி மேஷ ராயிலேயே பெயர்ச்சி அடைகிறார்.

எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்

டிசம்பர் மாதம் வரை இந்த குரு வக்ர காலம் இருக்கும். பின்னர் டிசம்பர் 31-ம் தேதி மீண்டும் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த குருவின் வக்ர பெயர்ச்சியால் யாருக்கு யோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம். குறிப்பாக இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது. இவர்களுக்கு செல்வம் தொழில் முன்னேற்றம் ஆகியவை கிடைக்கும்.

Tap to resize

மிதுனம் :

குருவின் இந்த வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகப் பெரிய சாதக பலன்களை தர்ப்போகிறது. மிகவும் மங்களகரமான நேரமாக  இந்த காலக்கட்டம் இருக்கும். வருமான வீட்டில் வியாழன் குடி கொண்டிருப்பதால் இந்த காலக்கட்டத்தில் பண வரவு அதிகரிக்கும். தொழிலில் பெரும் லாபம் கிடைக்கும். பல வணிக ஒப்பந்தங்கள் ஏற்படும். பணியில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

மிதுனம் :

குருவின் இந்த வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகப் பெரிய சாதக பலன்களை தர்ப்போகிறது. மிகவும் மங்களகரமான நேரமாக  இந்த காலக்கட்டம் இருக்கும். வருமான வீட்டில் வியாழன் குடி கொண்டிருப்பதால் இந்த காலக்கட்டத்தில் பண வரவு அதிகரிக்கும். தொழிலில் பெரும் லாபம் கிடைக்கும். பல வணிக ஒப்பந்தங்கள் ஏற்படும். பணியில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

சிம்மம் :

சிம்ம ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர பெயர்ச்சி சிறப்பான நன்மைகளை வழங்கும். சிம்ம ராசியில் வியாழன் இருப்பதால் அதிர்ஷ்டத்தின் முழு பலனும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து விருப்பங்களும் தடையின்றி நிறைவேறும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். படித்துக் கொண்டிருப்பவர்கல் வெளிநாடு செல்ல நினைத்தால், அது நிறைவேறும்

மீனம் :

மீன ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர பெயர்ச்சி ராஜயோகத்தை கொடுக்கும் என்றே சொலல் வேண்டும். வியாழன் செல்வம் மற்றும் பணத்தின் இடத்தில் உள்ளார். இதனால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்தின் புதிய கட்டம் உருவாகும். சரியான முறையில் பணம் கிடைக்கும். இதுவரை வராமல் தடைபட்ட பணமும் வந்து சேரும். இந்த காலக்கட்டத்தில் பெரிய அளவில் நிதி முன்னேற்றம் இருக்கும்.

Latest Videos

click me!