Numerology: உங்க கூட இவங்க இருந்தா எப்போதும் ஹேப்பிதான். பேரன்பும் பாசிட்டிவ் எனர்ஜியும் கொண்ட அந்த 'அழகான ஆன்மாக்கள்' எந்த தேதியில் பிறந்தவர்கள் தெரியுமா? இதோ இந்த செய்தியில் பார்ப்போம்.
ஒருவருடைய பிறப்பு என்பது வெறும் தற்செயலானது அல்ல; அது அவர்களின் ஆளுமையையும், குணநலன்களையும் தீர்மானிக்கும் ஒரு சக்தி என்று எண் கணிதம் (Numerology) கூறுகிறது. பொதுவாகவே, மனிதர்களில் சிலரைப் பார்த்த உடனே நமக்கு ஒரு நேர்மறை ஆற்றல் (Positive vibes) கிடைக்கும். அதற்கு அவர்களின் அழகான, தூய்மையான மனசுதான் காரணம். எண் கணிதத்தின்படி, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் பிறவியிலேயே மற்றவர்கள் மீது அதிக அன்பும், இரக்கமும் கொண்ட "அழகான ஆன்மாக்களாக" திகழ்கிறார்கள். அவர்கள் யார் யார் என்று இங்கே பார்ப்போம்.
எந்த மாதத்திலும் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் (கூட்டுத்தொகை 9 வரும் நபர்கள்) அல்லது குறிப்பாக 9-ஆம் தேதியில் பிறந்தவர்கள், இயல்பாகவே மனிதாபிமானம் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் பாரபட்சமற்ற குணம், கூர்மையான புத்திசாலித்தனம் மற்றும் பிறரை வழிநடத்தும் உள்ளுணர்வு ஆகியவை அதிகமாக இருக்கும்.
எந்தவொரு சூழ்நிலையிலும் சரியான ஆலோசனைகளை வழங்குவதில் இவர்கள் வல்லவர்கள். இவர்களின் முதிர்ச்சியான பேச்சும், அன்பான அணுகுமுறையும் மற்றவர்களை எளிதில் கவர்ந்துவிடும். இதனால் இவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு நட்பு வட்டம் இருந்துகொண்டே இருக்கும்.
15-ஆம் தேதியில் பிறந்தவர்கள் வாழ்க்கையை மிகவும் பாசிட்டிவாகவும், வித்தியாசமான கோணத்திலும் அணுகும் குணம் கொண்டவர்கள். இவர்களிடம் தனித்துவமான சிந்தனையும், கலைநயமும் (Creativity) கலந்திருக்கும். ஒரு சுதந்திரமான தலைவருக்கான தகுதிகள் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.
மற்றவர்களிடம் இருக்கும் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை ஊக்குவிப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. எந்தவொரு புதிய சூழலிலும் தங்களை எளிதாக மாற்றியமைத்துக் கொள்ளும் இவர்கள், தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பார்கள்.
18-ஆம் தேதியில் பிறந்தவர்கள், தங்களின் லட்சியங்களை அடைவதற்காக கடுமையாக உழைக்கும் குணம் கொண்டவர்கள். வெளியில் பார்ப்பதற்கு லட்சியவாதிகளாக, பிஸியாகத் தெரிந்தாலும், தங்களுக்குப் பிடித்தவர்களிடம் மிகுந்த பாசத்துடனும், விசுவாசத்துடனும் நடந்துகொள்வார்கள்.
இவர்களுடைய அன்பை வெளிப்படுத்தும் விதம் தனித்துவமானது. இவர்களை நண்பராகவோ அல்லது வாழ்க்கைத்துணையாகவோ பெறுவது பெரிய வரம் என்று சொல்லலாம். அந்தளவிற்கு நம்பகத்தன்மை வாய்ந்தவர்களாக இவர்கள் இருப்பார்கள்.
55
27-ஆம் தேதியில் பிறந்தவர்கள்
27-ஆம் தேதியில் பிறந்தவர்கள், ஆழமான சிந்தனைகளும், ஆன்மீக ஈடுபாடும் கொண்ட மென்மையான மனிதர்கள் ஆவார்கள். இவர்களுக்கு உள்ளுணர்வு (Intuition) மிகவும் அதிகமாக இருக்கும். மனிதர்களின் மன ஓட்டத்தை எளிதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு தங்களின் ஆறுதலான வார்த்தைகளால் மன அமைதியைத் தருவார்கள். இவர்களின் அலைவரிசை எப்போதும் அமைதியையும், பாசிட்டிவ் எனர்ஜியையும் நோக்கியே இருக்கும் என்பதால், இவர்களின் சேர்க்கை சுற்றியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
பொறுப்புத் துறப்பு: இக்கட்டுரையில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான எண் கணித (Numerology) நம்பிக்கைகள் மற்றும் பொது அறிவின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இது முற்றிலும் தகவல் நோக்கங்களுக்கானது தனிநபர்களின் வாழ்க்கைச் சூழல் மற்றும் நம்பிக்கைகளைப் பொறுத்து இதன் முடிவுகள் மாறுபடலாம். இதில் உள்ள தகவல்களுக்கு எங்கள் இணையதளம் எந்தவிதமான அறிவியல் பூர்வமான உத்தரவாதத்தையும் வழங்கவில்லை.