Published : Jun 15, 2026, 03:00 PM ISTUpdated : Jun 17, 2026, 01:20 AM IST
Numerology Your Personality Connection Ramayana Characters by Mulank 1 to 9 Birth Date: எண் கணிதத்தின்படி நம் பிறந்த தேதியை வைத்து, நாம் ராமாயணத்தில் எந்த கதாபாத்திரம் என்பதை அறிந்து கொள்ள முடியும். அது குறித்து இங்கு பார்க்கலாம்.
Numerology Your Personality cConnection Ramayana Characters by Mulank 1 to 9 Birth Date
எண் கணிதத்தின்படி, ஒருவரின் பிறந்த தேதியை வைத்து அவர்களின் ஆளுமை, எதிர்காலம், தொழில் வளர்ச்சி என அனைத்தையும் நம்மால் கணிக்க முடியும். அந்த வகையில் ராமாயணத்தில் நாம் எந்த கதாபாத்திரத்தின் அம்சமாக விளங்குகிறோம் என்பது குறித்தும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அது எப்படி என்பது குறித்து இங்கு காணலாம்.
இதை அறிந்து கொள்வதற்கு நம் பிறந்த தேதியை ஒற்றை இலக்கமாக மாற்ற வேண்டும். எந்த மாதத்திலும் ஒன்று முதல் ஒன்பதாம் தேதியில் பிறந்தவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் 11 முதல் 31ம் தேதி வரை பிறந்திருந்தால் அந்த இரண்டு இலக்கங்களை கூட்டுவதன் மூலம் ஒற்றை இலக்கம் கிடைக்கும். உதாரணமாக ஒருவர் 25 ஆம் தேதி பிறந்திருந்தால் அந்த இரண்டு இலக்கங்களையும் கூட்ட வேண்டும் (2+5=7).
குணங்கள்: தலைமைப் பண்பு, நேர்மை, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல் (தர்மம்).
எண் 1-ல் பிறந்தவர்கள் இயற்கையிலேயே தலைவர்களாக இருப்பார்கள். எதையும் நேர்வழியில் செய்ய விரும்புவார்கள். இக்கட்டான சூழ்நிலையிலும் தங்களது கொள்கைகளை விட்டுக்கொடுக்காத 'மரியாத புருஷோத்தமன்' ராமரை போன்ற குணம் கொண்டவர்கள்.
சந்திரனின் ஆதிக்கம் பெற்ற இந்த எண்ணில் பிறந்தவர்கள் மென்மையான குணம் கொண்டவர்கள். பிறர் மீது அதிக அன்பு காட்டுவார்கள். சீதையைப் போலவே வெளியில் அமைதியாகத் தெரிந்தாலும், எவ்வளவு பெரிய கஷ்டங்களையும் தாங்கும் அசாத்திய மனவலிமை கொண்டவர்கள்.
குருவின் ஆதிக்க எண் இது. இந்த எண் காரர்கள் சிறந்த அறிவாளிகளாகவும், மற்றவர்களுக்கு நல்வழி காட்டும் குருவாகவும் இருப்பார்கள். இராமருக்கு கல்வி மற்றும் ஆயுதக் கலைகளைக் கற்பித்த முனிவர்களைப் போல, சமூகத்தில் மதிப்பிற்குரிய இடத்தில் இருப்பார்கள்.
குணங்கள்: அசாத்திய பலம், தனித்துவமான சிந்தனை, விசுவாசம்.
எண் 4 ராகுவைக் குறிக்கும். இவர்களது சிந்தனை மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும். கும்பகர்ணனைப் போல தன் அண்ணன் (இராவணன்) தவறு செய்கிறான் என்று தெரிந்தாலும், பாசத்திற்காகவும் விசுவாசத்திற்காகவும் இறுதிவரை நின்ற பண்பு இவர்களிடம் இருக்கும்.
குணங்கள்: புத்தி கூர்மை, வேகம், அண்ணன் மீதான பற்று, சுறுசுறுப்பு.
புதன் கிரகத்தின் ஆதிக்கம் பெற்றவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும், சமயோசித புத்தி உள்ளவர்களாகவும் இருப்பார்கள். ராமரின் நிழல் போல உடனிருந்து, அவரைப் பாதுகாத்த தம்பி லட்சுமணனைப் போன்ற விசுவாசமும், வேகமும் இவர்களது குணமாகும்.
குணங்கள்: அழகு, கலைநயம், நீதிநெறி, குடும்பத்தின் மீது பாசம்.
சுக்கிரனின் எண் என்பதால் அன்பும், அழகும் நிறைந்தவர்கள். இராவணனின் மனைவியான மண்டோதரி, தன் கணவன் தவறு செய்தபோது அதைத் தைரியமாகச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த முயன்றாள். அதேபோல, இந்த எண்காரர்கள் நீதியின் பக்கம் நின்று, நெறி தவறாத வாழ்க்கை முறையை வாழ்வார்கள்.
குணங்கள்: பக்தி, அடக்கம், அசாத்திய திறமை, ஆன்மீக தேடல்.
கேதுவின் ஆதிக்கம் கொண்ட 7-ஆம் எண்ணில் பிறந்தவர்கள் ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள். தங்களுக்குள் இருக்கும் பிரம்மாண்ட திறமையை யாராவது நினைவூட்டினால் மட்டுமே உணர்வார்கள் (ஜாம்பவான் அனுமனுக்கு நினைவூட்டியது போல). இவர்களது பக்தி மற்றும் அர்ப்பணிப்பு அளவிட முடியாதது.
குணங்கள்: தியாகம், கடுமையான உழைப்பு, நியாயம், சோதனைகளைக் கடத்தல்.
சனியின் ஆதிக்கம் என்பதால் இவர்களது வாழ்க்கை ஆரம்பத்தில் போராட்டமாக இருக்கலாம். ஆனால், தர்மத்தின்படி வாழ்வார்கள். அரியணை தேடி வந்தபோதும் அதை மறுத்து, ராமரின் பாதுகைகளை வைத்து ஆட்சி செய்த பரதனைப் போல, தியாக மனப்பான்மை கொண்டவர்கள்.
செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள் மிகுந்த வீரமும், கோபமும், எதையும் சாதிக்கும் பிடிவாதமும் கொண்டவர்கள். இராவணன் சிறந்த சிவபக்தன், வீணை வாசிப்பதில் வல்லவன், மகா பண்டிதன். அவனது பேராற்றலும், தலைமைப் பண்பும் (அவனது அகந்தையைத் தவிர்த்து) இந்த எண்ணின் பலத்தைக் குறிக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.